ஆரியரின் மதபுராண சாஸ்திரத்தில் முஸ்லிம்கள் மிலேச்சர் என்றும், அவர்கள் மொழியை மிலேச்ச மொழி என்றும், பார்ப்பனரல்லாதாராகிய திராவிடரை, சூத்திரர், வேசி மகன் என்றும் எழுதி வைத்துக் கொண்டும், படிப்பில் அவர்கள் 100க்கு 100 பேர் படித்துவிட்டு திராவிடர் 100க்கு 90 பேருக்கு மேலாகவே தற்குறிகளாகவும், அவர்கள் நோகாது பாடுபடாது வாழும் உயர்தர உத்தியோகம் வகிக்கவும், நாம் காடுதிருத்தி, கட்டைவெட்டி, வண்டி இழுத்து, மூட்டை தூக்கி, தெருக்கூட்டி வாடவும், அவர்களே நமக்கு மதத்துக்கும் அரசியலுக்கும் குருமார்களாக இருக்கவும், நாம் அவர்களின் பாததுளியே பிரசாதமென்று எண்ணவுமான நிலைமைத் தானே கண்டோம். நாமெல்லாம் இந்த நாட்டை ஆண்ட வர்க்கத்தார். ஆரியர் இந்நாட்டுக்கு பிழைப்புக்காக குடிபுகுந்தவர்கள். ஆனால் அவர்கள் அய்க்கோர்ட் ஜட்ஜுகள், நாம் டவாலி சேவகர்கள். இந்த நிலைமை மாற வேண்டுமென மானமுள்ள தமிழ் மகன் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
- தந்தை பெரியார், 'குடிஅரசு', 5.5.1940
- ‘மணியோசை’
No comments:
Post a Comment