சேர, சோழர்களைப் பற்றியோ, அவர்களுடைய ஆட்சி யைப் பற்றியோ சொல்லிக் கொடுக்கிறார்களா? புத்தகம் எழுது கிறார்களா? கிளைவ் நெப்போலியன் ஆகியவர்களைப் பற்றி யன்றோ சொல்லிக் கொடுக்கின்றனர். நமது பிள்ளைகளுக்கு எப்படி நமது தேச சரித்திரம் தெரிய முடியும்? எப்படி அவர் களுக்குத் திராவிட தேசாபிமானம் வர முடியும்? இளமையிலே இவ்வாறு செய்து விடுகின்றனரே. ஆனால், ஆங்கிலேயர் களைப் பாருங்கள். எல்லா வெள்ளையனும் எழுதுகிறான். தங்கள் தங்கள் கலைகளைப் பற்றி, சரித்திரத்தைப் பற்றி. நாம் மனுதர்மத்தையல்லவோ வீட்டுக்கு வீடு பூசை செய்கிறோம். நமக்கு என்ன இருக்கிறது? ஏதோ ஒன்றிரண்டு உள்ள கலைகளையும்தான் 18ஆம் பெருக்கில் காவேரியில் விடு என்று அவன் கற்பித்து விட்டான். நாமும் அப்படியே செய்து வருகிறோம்! நாம் எங்கே உருப்படுவது?
- தந்தை பெரியார், 'குடிஅரசு', 21.4.1940
- ‘மணியோசை’
No comments:
Post a Comment