ஒற்றைப் பத்தி : மறுப்பும் - அழைப்பும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 13, 2020

ஒற்றைப் பத்தி : மறுப்பும் - அழைப்பும்!


இந்துக் கோவிலுக்குள் மற்ற மதத்தவர்கள் நுழைவதற்கு இடமில்லை, இன் னும் சொல்லப் போனால் இந்த வகையில் விளம்பரப் பலகையே வைத் துள்ளனர்.


தாழ்த்தப்பட்டவர்கள் இந் துக்கள், நாங்கள் தாழ்த்தப்பட்ட வர்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று தொலைக்காட்சிகளில் தம்பட் டம் அடிப்பதில் மட்டும் குறைச் சல் இல்லை.


2017 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று வானொலியில் ‘மங்கி பாத்' நிகழ்ச் சியில் உரையாற்றிய பிரத மர் மோடி, பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் பூரி ஜெகன்னாதர் கோவிலையும், அதன் பாரம்பரியத்தையும் புகழ்ந்து எழுதியிருப்பதாகவும் ஏனெனில், அது சமூகநீதியை யும்,  சமூக நல்லிணக்கத்தையும் போற்றுகிறது என்றும் பேசினார்.


என்ன கொடுமை என்றால், பூரி ஜெகன்னாதன் கோவிலுக்கு அம்பேத்கர் சென்ற போது, அவர் தடுக்கப்பட்டார். ஆனால், கிறிஸ்துவரான மவுண்ட் பேட் டனுக்கோ சிவப்புக் கம்பள வரவேற்பு.


இதை எடுத்துச் சொல்லுவது நாமல்ல - மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும், பின்னர் வி.பி. சிங் அமைச்சரவையில் நிதிய மைச்சராகவும் இடம் பெற்றி ருந்த பேராசிரியர் மதுதண்ட வதே மண்டல் கமிசன் முன் அளித்த சாட்சியத்தில் இவ்வாறு கூறுகிறார்.


இதைச் சுட்டிக்காட்டி 2017 மே 8 ‘அவுட்லுக்' இதழில் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக் கழக மேனாள் துணைவேந் தரும், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான ஏ.கே.பிஸ்வாஸ் எழுதியுள்ளார்.


இதுகுறித்த ஒரு குறிப்பு தனஞ்செய்கீர்  எழுதிய அம் பேத்கரின் வாழ்க்கை வர லாற்று நூலான ‘‘Dr.Baba saheb Ambedkar - Life and Mission''   நூலில் 19 ஆவது அத்தியா யத்தில் உள்ளது.


1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாக்பூரில் உரையாற் றும்போது இதுகுறித்த தகவலை அண்ணல் அம்பேத்கர்  தெரி வித்ததாக பின்வரும் செய்தி இடம்பெறுகிறது.


(Ambedkar) cited how during his recent visit he could have only a distant view of the famous Jagannath temple at Puri from the terrace of a neighbouring house. 


அம்பேத்கர் சிறந்த மேதை - பெரும் கல்வியாளர். ஆனால், அவர் பூரி கெஜன்னாத் கோவி லுக்குச் செல்லும் போது அவரை சிலர் கோவிலில் நுழைய விடா மல் தடுத்துள்ளனர். பூரி ஜெகன் னாத் கோவில் குறிப்பிட்ட வகுப் பினருக்கும், மரியாதைக்கும் உரியவர்களுக்குமான இடமா, அங்கு அனைவருக்கும் சம மான நடத்தை இருக்காதா? பிரிட்டிஷ் கவர்னர் மவுண்ட் பேட்டன் பிரபுவிற்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்த கோவில் நிர்வாகம், அம்பேத்கரைத் தடை செய்தது ஏன்?


அண்ணல் அம்பேத்கர் முதல் இன் றைய இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரை இந்த நிலை தானா? இதுதான் ‘அர்த்தமுள்ள இந்து மதமா?'


- மயிலாடன்


No comments:

Post a Comment