பெத்துல், ஜூலை 13- மத்தியப் பிரதேசம் பெத்துல் மாவட்ட தலைமையகத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள கோடடோங்ரி தொகுதியின் கெரியா கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப். இவர் போபாலில் படிக்கும்போது அங்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற் பட்டு உள்ளது. இருவரும் நீண்ட நாள்களாக காதலித்து வைந்து உள்ளனர்.
இந்த நிலையில் சந்தீப்புக்கு வீட்டில் பெண் பார்த்து மண முடிக்க முடிவு செய்து உள் ளனர். இதற்கு சந்தீப் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஆனால் பெற்றோர் பிடிவாத மாக இருந்து உள்ளனர். இத னால் சந்தீப் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இதை தொடர்ந்து இந்த விவ காரம் பஞ்சாயத்துக்கு சென் றது. சந்தீப் குடும்பம், சந்தீப் காதலியின் குடும்பம், சந்தீப் பெற்றோர் பார்த்த பெண் ணின் குடும்பத்துடன் பஞ்சாயத்தார் சமரசம் பேசினர். இதை தொடர்ந்து இரண்டு இளம் பெண்களும் சந்தீப்பு டன் சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டனர்.
அதன் பின்னர் அவரது திருமணம் கெரியா கிராமத் தில் நடைபெற்றது. திருமண விழாவில் மணமகனின் குடும் பத்தினர் மற்றும் கிராமவாசி கள் மற்றும் இரண்டு மணப் பெண்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து மூன்று குடும்பங்களுக்கும் எந்த ஆட் சேபனையும் இல்லை. அவர் கள் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்ட தால், அவர்களுக்கு திருமணம் செய்யப்பட்டது என கோட டோங்ரி கிராமப் பஞ்சாயத்து துணைத் தலைவரும் திரு மணத்திற்கு சாட்சியுமான மிஸ்ரிலால் பர்ஹத் கூறினார்.
சந்தீப்பை மணந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர் ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு இளம் பெண் கோலாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை யில் 2 பெண் களை திருமணம் செய்ததால் சந்தீப் உய்கே கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment