டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி; எம்.எல்.ஏ.க்க ளுக்கு தலா ரூ.25 கோடி பேரம். முதல்வர் அசோக் கேலாட் பரபரப்பு குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:
- மத்திய அரசு உத்தரவுப்படி, செப்டம்பரில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப், டில்லி மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்குக் கடிதம்.
தினகரன், சென்னை:
- இட ஒதுக்கீட்டில் சம்பள வருமானத்தை உள்ளடக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என மார்க்ஸ்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- சிங்கப்பூரில் கரோனா பாதுகாப்புடன் 11.7.2020 அன்று நடைபெற்ற தேர்தலில் லீ செய்ன் லுங் தலைமையிலான ஆளும் பீப்பிள் ஆக்ஷன் கட்சி, மொத்தம் உள்ள 93 தொகுதிகளில், 83 தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
எகனாமிக் டைம்ஸ்:
- அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளி நாட்டு மாணவர்களுக்கு விசா மறுப்பு குறித்த டிரம்ப் அரசின் ஆணையை எதிர்த்து, 180 கல்லூரிகள் வழக்குத் தொடர்ந்துள்ளன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- பி.எம்.கேர்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு நிதி அளித்த நிறுவனங் களின் பெயர்களைத் தெரிவிக்க பிரதமர் மோடி ஏன் மறுக்கிறார்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி யுள்ளார். சீன நிறுவனங்கள் பல, நிதி உதவி அளித்துள்ள என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தி இந்து:
- ஜாதிக்குப் பாதி நாள் எனும் தலைப்பிலான ஆங்கில நூல், 1952 முதல் 1955 வரையிலான தமிழ்நாட்டின் கல்வித் திட்டம் தொடர் பான வரலாற்றையும், திராவிட அரசியலையும் விளக்குகிறது. நூலாசி ரியர்: டி.வீரராகவன்.
- ஜார்கண்ட் மாநிலத்தின் சிடோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்த ராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் பழங்குடி பெண் சோனாஜாரியா மின்ஸ், சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றவர். பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட ஜாதியப் பாகுபாடு தனக்கு சென்னையில் நிகழவில்லை என விவரிக்கிறார்.
- குடந்தை கருணா
12.7.2020
No comments:
Post a Comment