புதுச்சேரி, ஜூலை 2- புதுச்சேரி மாநிலத்தில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை புதுவை முதல்வர் நாராயணசாமி வழங்கியுள்ளார்.
திருக்கனூர் அருகே கூனிச் சம்பட்டு காலனியில் கரோனா தொற்றால் 30-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதையடுத்து இந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப் பட்டு, தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று கூனிச் சம்பட்டு காலனிக்கு சென்று, ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கட் டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தடுப்புக்கு வெளியே இருந்தபடி, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவா ரண பொருட்களை வழங்கி னார். அப்போது டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. திருக் கனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment