ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்
உ டன் உண்ணல் (சமபந்தி போஜனம்) என்ற உரிமைப் போர்
சிவசாமி அய்யர்
இந்தக் கூட்டத்திலேயே, சர்.பி.எஸ். சிவசாமி அய்யர் அவர்கள் தஞ்சை ஜில்லா போர்டு தீர்மானங்களைக் கண்டு கவலைப் படுவதாகவும், அவற்றைக் கண்டிப்பதாகவும் ஒரு தீர்மானம் கொண்டு வந்து பேசியிருக்கிறார். அவர் பேசும் போது ஜாதியை ஒழிப்பது ஜில்லா போர்டின் கடமை அல்ல வென்றும், சமபந்தி போஜனத்தை ஏற்படுத் தியது அதிகாரத்தை மீறிய செயலாகும் என்றும் பேசியிருக்கிறார். இப்பெரியாருக்குத் தன்னுடைய ஜாதியின் உயர்வைக் காப்பாற்று வதில் எவ்வளவு ஆத்திரமிருக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
திவான் பகதூர் கே.எஸ்.ஆர்.
சர்.பி.எஸ். சிவசாமி அய்யர் அவர்களின் தீர்மானத்தை ஆதரித்து இந்து மகாசபையைப் பற்றிப் பிரமாதமாகப் பிரச்சாரம் செய்து வரும் திவான் பகதூர் கே.எஸ். ராமசாமி சாஸ்திரியார் பேசியிருக்கிறார். இவர் தஞ்சை ஜில்லா போர்டின் செய்கை ஏதேச்சதிகாரம் என்று கூறினாராம். இந்துக்களுக்குள் ஒற்றுமை உண்டாக வேண்டும்; ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும்; கலப்பு மணம், சமபந்தி போஜனம் ஏற்பட வேண்டும்; என்ற கொள் கைகளை இந்து மகாசபை மறுக்கவில்லை. இவை களை ஆதரித்து மதுரை மகாநாடு தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறது. இருந்தும் சாஸ்திரி யாருடைய தனிப்பட்ட கருத்து ஜாதி பேதத்தை ஆதரிப்பதும், சமபந்தி போஜனத்தை எதிர்ப்பதும் போலும்!
வெட்கம்!
இந்த அக்கிரகாரக் கூட்டத்தில், தோழர்களான, திவான் பகதூர் வி. மாசிலாமணிப் பிள்ளை, எம்.பாலசுப்பிரமணிய முதலியார், எம். ராஜமன்னார் செட்டியார், ராவ்சாகிப் எஸ். வையாபுரிப் பிள்ளை யென்னும் தமிழ்ப் பண்டிதர் ஆகியவர்களும் சேர்ந்து கொண்டு, அவர்கள் செய்கையை ஆதரித் திருப்பதுதான் பார்ப்பனரல்லாதார் தலைகுனியத் தகுந்த செய்தி,
பார்ப்பனரல்லாதாருடன் உட்கார்ந்து சாப்பிடு வது இழிவானது என்று பார்ப்பனர் கூறுவதென்றால் பார்ப்பனரல்லாதாரை அவர்கள் என்ன ஜென்மம் என்று கருதுகிறார்கள் என்பதே நமக்கு விளங்க வில்லை. மக்களைக் காட்டிலும் இழிந்த பிறவி என்று சொல்லக்கூடிய மாடு, ஆடு, பூனை, எலி, பல்லி, நாய், ஈ, எறும்பு முதலியவைகள் பார்த்தாலும், வாய் வைத்தாலும் அந்த உணவைச் சாப்பிடத் துணியும் இவர்கள் மனிதராகிய பார்ப்பனரல்லாதார் பார்க்கும்படி சாப்பிடுவது அவ்வளவு இழிவானது என்றால் பார்ப்பனரல்லாதார் மேற்கூறிய பிராணி களைக் காட்டிலும் இழிந்தவர்கள் என்பதுதானே அர்த்தம். இந்த இழிவை மானமின்றிச் சகித்துக் கொண்டு நிலைக்கவைக்கப் படித்த அறிவுடைய பார்ப்பனரல்லாதார் சிலர் துணை செய்வார்களா னால் அவர்களைப் பற்றி நாம் என்ன நினைப்பது?
சமூகப் புரட்சி!
ஜில்லா போர்டுத் தீர்மானங்களை ரத்துச் செய் யும்படி நம் கவர்னர் அவர்களிடம் விண்ணப்பித்துக் கொள்ள இக்கூட்டத்தினர் ஒரு கமிட்டி நியமித்திருக் கின்றனர். கவர்னர் பெருமான் இவர்கள் வேண்டு கோளுக்கு இணங்குவார் என்று நாம் நினைக்க வில்லை. ஒருக்கால் இணங்கிவிடுவாரானால் அப் பொழுது பெரியதோர் சமூகப் போராட்டம் நமது நாட்டில் நடைபெறும் என்பது உறுதி.
இதைத் தவிர தஞ்சை ஜில்லா போர்டின் செய் கையைக் கண்டித்தும், அதன் தீர்மானங்களை ரத்துச் செய்யும்படியும், கும்பகோணம் பார்ப்பனர் கள் பலர் கூடிக் கையொப்பமிட்டுக் கவர்னர் பெரு மானுக்கு விண்ணப்பம் அனுப்பியிருக்கிறார்களாம். இதுவும் பார்ப்பனர்களின் சமூகப் பற்றைக் காட்டு வதற்கு ஒரு உதாரணமாகும்.
பொது ஜனங்கள் யார்?
மேற்படி சென்னைக் கூட்டத்தில் தோழர் சீனிவாச சாஸ்திரியார் பேசும்போது "பழக்க வழக் கங்கள் முதலியவைகளைப் பற்றிய விஷயங்களில், நிதானமாக, முற்றிலும் வளர்ந்த பொது ஜன அபிப் பிராயத்தின் பலத்தைக் கொண்டுதான் சீர்திருத்தம் செய்வது மிகவும் முக்கியமான காரியம்" என்று கூறியிருக்கிறார்.
தஞ்சை ஜில்லா போர்டு தீர்மானத்திற்கு எந்தப் பொதுஜன எதிர்ப்பு இருக்கிறது என்று கேட்கிறோம். அணைந்து வரும் வைதீக விளக்கைக் காப்பாற்றப் பறந்து திரியும் மடிசஞ்சிக் கூட்டங்கள் தானா பொது ஜனங்கள். இந்த மடிசஞ்சிக் கூட்டங்களின் சுய நலக்கருத்துக்குத் தலைவணங்கி நடப்பதானால் 100க்கு 97 மக்களாயுள்ள பார்ப்பனரல்லாதார் கதி எப்படியாவது? அவர்கள் பார்ப்பனர்களின் “வைப் பாட்டி மக்கள்’’ “அடிமைகள்’’ என்ற இழிவான பொருளைக் காட்டும் சூத்திரர்களாகவேதான் வாழ வேண்டும். இந்தக் காரியத்துக்குக் கடுகளவாவது மானமோ, சுயமரியாதை உணர்ச்சியோ உள்ள எந் தப் பார்ப்பனரல்லாதாராவது சம்மதிக்க முடியுமா?
வரும் சனி அன்று தொடரும்
No comments:
Post a Comment