கொலைகாரர்கள்மீதும் கொலை வெறியான இனப்பற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 14, 2020

கொலைகாரர்கள்மீதும் கொலை வெறியான இனப்பற்று

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற என்கவுண்டர், அதன் தொடர்நடவடிக்கைகள் பற்றி பிரபல பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் எழுதியிருப்பதாவது:


“பொங்கி எழுந்து விகாஷ் துபே, எண்கவுண்ட ரானதை எதிர்த்து விலாசித் தள்ளுகிறார்கள் உத்தரப் பிரதேசப் பிராமணர்கள்!"


"நீங்கள் 'பிராமண' சமூகத்தின் நம்பிக்கையைக் கொன்று இருக்கிறீர்கள்."


"கொல்லப்பட்டது விகாஷ் மட்டுமல்ல, பிராமணர் களின் விசுவாசத்தையும்தான்"


இவை எல்லாம் சோஷியல் மீடியாக்களில் பிராம ணர்கள் எழுதிக் கொண்டிருக்கும் விமர்சனங்கள்!


உத்தரப்பிரதேசத்தின் பிரபல தாதாவான விகாஷ் துபே ஒரு பிராமணர் என்பது சற்று ஆச்சரி யமாகத்தான் இருக்கிறது.


பொதுவாக தமிழகத்தைப் பொறுத்தவரை பிராம ணர்கள் திரைமறையில் இருந்து கொண்டு காய்களை நகர்த்துவர்.


காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் என்ன நடந்தது என்பதை நாடறியும்.


ஆனால், வட இந்தியாவில் அவர்கள் தாங்களே களத்தில் இறங்கக் கூடியவர்கள்.  காந்தியார் கொலை யில் கோட்சே உள்ளிட்ட ஆறு முக்கிய குற்றவாளிகள் அவர்கள் என்பதெல்லாம் தெரிந்தவையே!


சுமார் மூன்று தசாப்தங்களாக உ.பியின் 'பார்ப்பன லாபி'தான், ஏகப்பட்ட கொலைகள் செய்து அறுபது வழக்குகள் உள்ள விகாஷ் துபேவை காப்பாற்றியுள்ளதாம்!


சாத்தான்குளம் போலீசாரை பின்னிருந்து இயக்கி வந்த இந்துத்துவ சக்திகளாக, ஃபிரண்டஸ் ஆப் போலீஸ் அறியப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!


இந்தப் பதிவின் நோக்கம் பிராமண சமூகத்தை ஒட்டு மொத்தமாக மதிப்பிடுவதல்ல! எல்லா சமூகத் திலும் நல்லவர்கள், கெட்டவர்கள், அப்பாவிகள் உள்ளனர்! பிராமணர்களும் அதற்கு விதிவிலக்கல்ல! ஆனால், ஜாதி, மதம் ஆகியவற்றால் அதிகார ஆட்டம் ஆடுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனப்படுத்துகிறேன். அவ்வளவே!


இந்தப் பின்னணியில்தான் சாத்தான்குள சம்பவத் தில் போலீஸார்மீது அப்படியொன்றும் தவறு செய்ய வில்லை என்று வாதம் வைக்கிறார் குருமூர்த்தி!


மக்களுக்கான காவல்துறை என்ற அமைப்பையே தங்களுக்கான ஏவலர்களாக மாற்றத் துடிக்கும் - எப்போதுமே தங்களை நியாயவான்களாக காட்டிக்கொண்டு அநீதிகளை அதிகாரத்தின் மேல்அடுக்கிலிருந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கும் - இவர்களே விகாஷ் துபேயைக் காட்டிலும் ஆபத்தானவர்கள் என்று நான் நம்புகிறேன்!”


-பிரபல பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனின் விமர்சனங்கள்தான் இவை.


ஜம்மு-காஷ்மீரில் ஒரு கோயிலில் வைத்து ஆஸிஃபா என்ற சிறுமியை பல நாள் பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்து தூக்கி வீசினர்.


இதில் பெரும்பாலோர் பார்ப்பனர்களே! எந்த அளவுக்கு அவர்கள் திமிர் ஏறிச் சென்றனர் என்றால், காவல்துறை அதிகாரியைப் பார்த்து - 'நீங்களும் பிராமணர்' 'நாங்களும் பிராமணர்கள்', இந்த  நிலையில் எங்களைக் குற்றவாளியாக்கலாமா?' என்று கேட்கும் அளவுக்குச் சென்றுள்ளனர். அதனை அவர் ஏற்கவில்லை என்ற நிலையில் அந்தக் காவல்துறை அதிகாரிக்கு எப்படியெல்லாம் அச்சுறுத்தல்கள் இருந்தன என்பதை காவல்துறை அதிகாரியான சுவேதாம்பரி சர்மா சொல்லவில்லையா?


கொலைகாரர்கள் பார்ப்பனர் என்றால், அவர் களைக்கூட கண்மூடித்தனமாகக் காப்பாற்றும் இந்த 'அதீதச் செயலு'க்கு என்ன பெயர்?


தர்மத்தைப்பற்றியும் ஒழுங்குமுறைகள் பற்றியும் அவர்கள் போல பேசக் கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களுக்குள் உள்ள இனப்பற்று என்பது கண்மூடித்தனமானது என்பதில் அய்யமில்லை.


No comments:

Post a Comment