கவிஞர் நந்தலாலா காணொலியில் பங்கேற்பு
தஞ்சாவூர், ஜூலை 13- தஞ்சை மாதாக் கோட்டை சாலையில் இயங்கிவரும் பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் மற்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகத் தின் 13ஆம் ஆண்டு விழா 14.6.2020, மாலை 6 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடை பெற்றது.
இவ்விழாவிற்கு மாநில பகுத்தறி வாளர் கழகத் துணைத் தலைவர் கோபு.பழனிவேல் தலைமையேற்று உரையாற்றி, புரட்சிகவிஞர் பாரதி தாசன் பாடல்களையும் பாடினார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக் குரைஞர் அ.அருணகிரி, தஞ்சை மாந கர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். திராவிடர் முன்னேற்ற கழக தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவரணி அமைப் பாளர் மருத்துவர் அஞ்சுகம்பூபதி, திரா விடர் கழக தலைமை கழக சொற் பொழிவாளர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு தொடக் கவுரையாற்றினர். மாநில இளைஞ ரணி துணை செயலாளர் இரா.வெற் றிகுமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் கவிஞர் நந்தலாலா அவர்கள் கலந்து கொண்டு ‘நூலைப் படி’ என்ற தலைப் பில் பின்வருமாறு உரையாற்றினார்.
அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள இந்நாளில் தந்தை பெரியார் அவர் களின் சிந்தனையே வெற்றிபெற்றுள் ளது எனலாம், இந்தியாவில் முதன் முதலில் கணினி அறிமுகமானபோது கிண்டியில்தான் அதனை வைத்திருந் தார்கள், அப்போது தந்தை பெரியார் தனது 78 வயதில், முடியாத காலத்தி லும், உதவியாட்கள் துணையுடன் சென்று கணினியை பார்த்து, அதனு டைய பயன்பாட்டை கேட்டு தெரிந்து கொண்டார், ஏனென்றால் இனிவரும் காலங்களில் இந்த கணினி தான் உலகை ஆளப் போகிறது என்று அன் றைக்கே தொலைநோக்கோடு சிந் தித்து அந்த அறிவியல் சாதனத்தை சென்று பார்வையிட்டுஅதனைப் பற்றி தெரிந்துகொண்டார் இப்படி அறிவியல் பாய்ச்சலின் உள்ளுணர்வு தான் தந்தை பெரியார்.
புத்தகங்களின் வடிவம் இன்றைக்கு மாறிவிட்டது சிறுகதைகள் குறும் படமாகவும் அச்சு நூல்கள் மின் நூல் களாகவும் வெளிவர தொடங்கிவிட்ட அறிவியல் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அச்சு ஊடகங் கள் அனைத்தும் இனி என்னவாகும் என்ற நிலையில் நம்முடைய ஆசிரியர் அவர்கள் இந்த அறிவியலை பயன் படுத்தி இன்றைக்கு பல லட்சக்கணக் கானோர் கைகளுக்கு விடுதலை நாளி தழை சென்றடைய வைத்திருக்கிறார், இப்படி அனைத்துமே இன்றைக்கு இணையதளம் வாயிலாக சாத்தியப் படுகிறது. விலைமதிப்புள்ள புத்தகங் களை முடியாதவர்களும் படிக்க வைப்பதன் மூலம் அறிவை பரவலாக் குதல் படிப்பகம் நூலகம் ஆகியவற் றின் தேவை இன்றைக்கும் அதிகமாக இருக்கிறது. அறிவை பொது வாக்கு வது புத்தகம்தான், காய்ச்சல் அடித் தால் பாராசிட்டமால் மாத்திரையை போட்டால் சரியாகிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும், இந்த மருந்து கண்டுபிடித்தது தனியுடைமை அதனை புத்தகத்தில் வெளியிட்டது பொதுவுடமை, இப்படி அனைத்து விதமான அறிவையும் பொதுவு டைமை ஆக்குவது புத்தகம்.
பெரியார் என்ன செய்தார், திரா விட இயக்கம் என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு நான் ஒரு கேள் வியை முன்வைக்கிறேன். இந்த கரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக் கும் நிலையில் பலபேர் சாலைகளில் நடந்தார்கள், அவர்கள் ஏன் நடந்தார் கள்? அரசாங்கத்திடம் பேசவில்லை மாறாக அவர்கள் அரசாங்கத்தை விமர்சித்து இருக்கிறார்கள். அவர்கள் நடந்த தடங்கள் சாலைகளில் ரத்தக் கறை படிந்தவையாக இருந்தன அந் தப் பாதங்கள் நடந்த திசை தெற்கி லிருந்து வடக்கா? வடக்கிலிருந்து தெற்கா? என்பதுதான் அந்த கேள்வி. நிச்சயமாக சொல்லலாம் அவை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அவையாக இருந்தன காரணம் வாழ தகுதியுள்ள இடம் தமிழகம்தான் என்று வடக்கில் இருந்து தெற்கே பிழைக்க வந்தவர்கள் தற்போது நில வும் இந்த அசாதாரண சூழ்நிலையால் மீண்டும் தனது சொந்த இடத்திற்கே திரும்பியிருக்கிறார்கள் ஆக வாழ தகுதியுள்ள இடம் தமிழகம் தான் அதற்கு காரணம் திராவிட இயக்கம் தான்.
ஒரு மனிதன் எழுதிவைத்த தனது அனுபவத்தை பலரும் அறியச் செய் வது புத்தகம், எந்த புத்தகம் பலரால் படிக்கப்படுகிறது என்றால் படிப்ப வரின் உருவத்தைக் காட்டும் புத்த கமே. எந்த மொழியில் பிறந்திருந்தா லும் அந்த மொழியில் உள்ள சிறந்த நூல்களை படித்து இருக்க வேண்டும் ஏனென்றால் மொழிதான் அறிவை காலம் கடந்து கடத்துகிறது மொழி தான் சமூகத்தின் அறிவை சேகரித்து வைத்து மொழி அழியும் நிலையில் அந்த இனமும் அழியும். ஆகவே இளை ஞர்களே மாணவர்களே நீங்கள் அவ சியம் படிக்க வேண்டியது வாழ்க்கை வரலாறுகளை, வாழ்க்கையில் வெற்றி பெற ஆசைப்பட்டால், வெற்றி பெற்றது எப்படி என்று இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இந்த விடுமுறையை படிப்பதற்கு பயன்படுத்துங்கள். தெரிந்து கொள் வதில் எந்த சார்பும் இருக்கக்கூடாது. செயல்படுவதில்தான் சார்போடு செயல்பட வேண்டும். நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும் என்று கூறி சிறப் புரை ஆற்றினார்.
மானமிகு வி.சி.வில்வம் அவர்கள் திருச்சியிலிருந்து zoom செயலி மூலம் அனைவரையும் இணைத்து நிகழ்ச் சியை நெறிபடுத்தினார். இறுதியாக தஞ்சை மண்டல இளைஞரணி செய லாளர் மானமிகு ராஜவேல் நன்றி உரை ஆற்றினார். இக்கூட்டத்தில் ஏரா ளமானவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment