நாவலர் நூற்றாண்டு நிறைவு விழா  (11.7.2020) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 11, 2020

நாவலர் நூற்றாண்டு நிறைவு விழா  (11.7.2020)

திருக்குறள் மாநாடு - சென்னை



தமிழகத்தில், மக்கள் நல்வாழ்வு வாழ நன்னெறி காட்டவந்த சான்றோர்களில் தலைசிறந்து விளங் குபவர் திருவள்ளுவப் பெருந்தகையார் ஆவார். அவர் இயற்றிய திருக்குறள், உலகம் உய்யும் பொருட்டு உயர்நெறி காட்ட வந்த ஒரு பெரும் அறநூல்.


திருக்குறள் தனிமனிதனின் வாழ்க்கைக்கும், சமுதாயப் பொது வாழ்க்கைக்கும் நல்ல வழிகாட்டும் நூல்; அது நல்லன எவை, அல்லன எவை என்பதைச் சுட்டிக்காட்டும் நூல்; தனிமனிதனுக்கும் சமுதாயத் திற்கும் ஆன கடமைகளை வலியுறுத்தும் நூல்; அறத்திற்கு விளக்கந்தந்து அதற்கு ஆக்கம் பயக்கும் நூல்; நற்பண்புகளையும், நற்செயல்களையும் வரையறுத்துக் கூறும் நூல்; தீய பண்புகளையும், தீய செயல்களையும் சுட்டிக் காட்டி அவற்றை வெறுத்து ஒதுக்கும் படிகூறும் நூல்; சால்பினை வற்புறுத் தும் நூல்; ஒழுக்கத்திற்கும், ஒப்புர விற்கும் உயர்வு தரும் நூல்; அறி வுக்கும், ஆற்றலுக்கும் மதிப்பு அளிக் கும் நூல்; முயற்சிக்கும், ஊக்கத்திற்கும் ஆக்கம் பயக்கும் நூல்; உழைப்பையும்  உற்பத்திப் பெருக்கத்தையும் வலியுறுத்தும் நூல்; மனித குலம் முழுவதும் ஒன்றே என்பதனை வலியுறுத்தும் சிறந்த காதலின்ப வாழ்வைப் போற்றும் நூல்; கற்பனைக் கடவுட் கொள்கைகளையும், அவை தொடர்பான கட்டுக் கதைகளையும் ஏற்காத நூல்; மூடநம் பிக்கைகள், குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஆகிய வற்றைப் போற்றாத நூல்; ஆரியக் கொள்கைகள் பலவற்றையும் மறுக்கும் நூல்; உலகியல் வாழ்வுக்கு அப்பாற்பட்ட எதனையும் வலியுறுத்தாத நூல்.


மேற்கண்ட இந்தக்காரணங்களுக்காகப் பெரியாரும், பகுத்தறிவாளர்களும், சுயமரியாதை இயக்கத்தினரும், திராவிடர் கழகத்தினரும் திருக்குறளைப் போற்றி வந்தனர். திருக்குறளின் சிறப்பை உலகுக்கு உணர்த்தவேண்டி, திராவிடர் கழகத்தின் சார்பாக 1949 சனவரி 15,16 நாட்களில் பொங்கல் பெருவிழாவையொட்டிச் சென்னையில், 'திருக்குறள் மாநாடு' ஒன்று கூட்டப்பெற்றது. மாநாட்டிற்கு நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் தலைமை தாங்கினார். ஏ. சக்ரவர்த்தி நயினார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பெரியார், திரு.வி. கலியாணசுந்தரனார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், அறிஞர் அண்ணா, நான், திருக்குறள் முனிசாமி, விருதுநகர் வெள்ளைச்சாமி, டாக்டர்  மு.வரதரா சனார் மற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டோம்.


திருக்குறளை நாட்டுக்குரிய நூலாக ஆக்கவேண்டும் என்றும், பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடவேண்டும் என்றும், திருவள்ளுவர் ஆண்டை நடை முறைக்குக்கொண்டு வர வேண்டும் என்றும், ஊர்தோறும் திருக்குறள் வகுப்பு நடத்தப்பெறவேண்டும் என் றும், மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருக்குறள் மாநாட்டின் ஏற்பாடுகள் அனைத் தையும் கண்காணிக்கும் பொறுப்பைப் பெரியார் அவர்கள் என்னிடத்தில் விட்டிருந்தார். சென்னை யிலிருந்த கழகத் தோழர்கள் பலரின் சிறந்த ஒத்துழைப்போடு, இரண்டு நாட்கள் மாநாட்டை நான் மிகச் சிறப்பாகவும் செம்மையாகவும் நடத்து வதில் வெற்றி கண்டேன். மாநாட்டில் தமிழறிஞர்கள் பலரும் ஆற்றிய உரைகள் மிகவும் பயன் தருவன வாக அமைந்திருந்தன.


நாவலர் எழுதிய 'வாழ்வில் நான் கண்டதும் - கேட்டதும்' நூலிலிருந்து...


பெரியாருடன் சுற்றுப்பயணம்


1946 சூலை 31 முதல் ஆகஸ்டு 8ஆம் நாள் வரை, பெரியார் அவர்களும், நானும் இணைந்து தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டோம்.


சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம் பட்டினம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, அறந்தாங்கி, தஞ்சாவூர், மன்னார்குடி, கும்ப கோணம், பாபநாசம், அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டோம். சில நாட்களில் இரண்டு மூன்று ஊர்களில் கூடப் பேசினோம். கூட்டங் களுக்கான ஏற்பாடு களைத் திருவாரூர் வி.எஸ்.பி. யாகூப் செய்திருந்தார்.


வெண் தாடியோடு இருந்த முதியவர் பெரியாரையும், கறுந்தாடியோடு இருந்த இளையவன் என்னையும் பல ஊர்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.


ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஏராளமான கழகத் தோழர்களும், பொது மக்களும் கூடி யிருந்து, எங்கள் பேச் சுக்களைக் கேட்டு மகிழ்ச்சியும், எழுச்சியும் பெற்றனர்.


தஞ்சை மாவட்டத்தில் மேற்கொண்டதைப் போலவே, பெரியாரும் நானும் சேர்ந்து, திருச்சி - கோவை - மதுரை - நெல்லை - சேலம் - வேலூர் - விழுப்புரம் - கடலூர் - செங்கை ஆகிய மாவட் டங்களிலும், பல நாட்கள் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்கள், திருமண விழாக்கள், ஆண்டு விழாக்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டோம்.


நாவலர் எழுதிய 'வாழ்வில் நான் கண்டதும் - கேட்டதும்' நூலிலிருந்து...


No comments:

Post a Comment