புதுடில்லி, ஜூலை 13- கரோனா நோயாளிகள் வெளியிடும் சுவாச காற்றில் இருந்து, புதியவர்களுக்கு கரோனா தொற்று வேகமாக பரவி வருவதை மருத்துவத்துறை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. இதன் பரவல், எந்த வகையில் மிக அதிகளவு இருக்கிறது என்பதை கண்டறிய, மருத்துவத்துறை அறிவியலாளர்கள் பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டுள்ளனர்.
ஆரம்ப கட்டத்தில் தும்மல், இருமலின் போது வெளியேறும் நீர்த்துளிகள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதை கண்டறிந்தது. அந்த பரவல் பற்றி, பல்வேறு நாட்டின் மருத்துவத்துறை அறிவியலாளர் கள் தொடர்ச்சியான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல புதிய தகவல்களை உலக சுகாதார அமைப் பிற்கு அறிக்கைகளாக அனுப்பியுள் ளனர். இந்த ஆய்வறிக்கைகளில் மிக முக்கியமாக, கரோனா நோயாளிகள் வெளியிடும் சுவாசக்காற்றில் இருந்து, அதிவேகமாக கரோனா பரவல் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்தே காற்றின் மூலம் கரோனா பரவுகிறது என் பதை கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மூடப்பட்ட இறுக்கமான அறைகளில் கரோனா நோயாளி வெளியிடும் சுவாசக்காற் றில், அதிகப்படியான அளவு கோவிட்-19 கிருமி தொற்று இருப் பதை ஆய்வாளர்கள் உறுதிபடுத்தி யுள்ளனர்.
ஆரம்பத்தில் நோயாளியின் மூச்சு உமிழ்வு காற்றின் வெளியீடு அளவு, நிமிடத்திற்கு 1000 முதல் 1 லட்சம் வரையில் இருந்தது. இந்த வைரசின் அளவு தற்போது, 1 கோடி யாக அதிகரித்துள்ளது. சராசரியாக நிமிடத்திற்கு 12 லிட்டர் சுவாச விகிதத்தில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு கோடிக் கணக்கான வைரஸ் துகள்களை வெளியேற்ற முடியும். இதன்மூலம் காற்றில் பரவுகிறது என்பதை உறுதிபடுத்தியிருப்பதாக பீக்கிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மார்ஷ் யங் யாவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நோயாளி வெளி யிடும் சுவாசக்காற்றில் இருந்து வெளிவரும் வைரஸ் கிருமி, நோயின் நிலையை பொருத்து வேறுபட்டி ருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. வெவ்வேறு இடத்தில் வேறு வேறு நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட சுவாசக்காற்றின் மூலம், வித்தியாசத்தையும் கண்ட றிந்துள்ளனர். சார்ஸ் நோய் பரவ லும் காற்றின் மூலம் இருந்தது. அதன் அதிகபட்ச சுவாச உமிழ்வு விகிதம் 1 லட்சமாகவே இருந்தது. ஆனால், கரோனா நோய் காற்றில் மிக அதிகளவு பரவுகிறது என்பதை உணர முடிகிறது என மற்றொரு ஆய்வில் மருத்துவத்துறை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
27 கரோனா நோயாளிகளை அறிகுறி தென்பட்ட நாள் முதல், தொடர்ந்து 14 நாட்கள் ஓரிடத்தில் வைத்து அவர்களை ஆய்வுக்கு உட் படுத்தினர். அதில், 5 நோயாளிகளின் சுவாசக்காற்றில் இருந்து வைரஸ் பரவல் 1 கோடி உமிழ்வு வரை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந் தனர். அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் ஆய்வுக்கு உட் படுத்தினர். அதில், தொலைபேசியில் 2 பேரின் கைகள் பட்ட இடங்களில் மட்டும், கரோனா வைரஸ் இருந் தது. மற்ற தொலைபேசி தொடுதல் களில் வைரஸ் இல்லை.
அதேபோல், நோயாளி பயன் படுத்திய கழிவறையின் மூலம் பர வல் 16.7 சதவீதமாகவும், மருத்துவ மனையின் தளங்களில் இருந்து 12.5 சதவீதமாகவும், பிற மேற்பரப்புகள் மூலம் 7.4 சதவீதமும், நோயாளிகள் தொடும் மேற்பரப்புகளில் இருந்த 4 சதவீதமும், சிகிச்சைக்காக தொடு தல்கள் மூலம் 2.6 சதவீதமும் பரவல் இருக்கிறது என்பதை கண்டறிந்து உள்ளனர்.
காற்று, தொடுதல் மூலம் பர வுதல் முதல் இடமாகவும், அசுத்த மான மேற்பரப்புகள் உடனான தொடர்பு மூலம் பரவுதல் இரண் டாம் இடமாகவும் விளங்குகிறது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சுவாச நீர்த்துளிகள் மற்றும் அசுத்தமான இடங்களில் நேரடி தொடர்பு ஆகியவை, தற் போது கரோனா வைரஸ் பரவலில் ஆதிக்க பகுதியாக இருக்கிறது.
வான்வழி பரவல் இருப்பதை உறுதிப்படுத்த, 243 இடங்களில் மேற்பரப்பின் காற்றை சேகரித்து பரிசோதித்தனர். அதில், 13 இடங் களில் சேகரிக்கப்பட்ட காற்றில், கரோனா வைரஸ் இருப்பதை உறு திபடுத்தியுள்ளனர்.
அதனால், முகக்கவசம் அணி வதை அனைவரும் வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள் ளது. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், 1 மணி நேரத்திற்கு கோடிக்கணக்கான வைரஸ்களை வெளியேற்ற முடியும். இதன்மூலம் காற்றில் பரவுகிறது.
No comments:
Post a Comment