திருமலை,ஜூலை 2, ஆந் திரப் பிரதேச மாநிலத்தி லுள்ள கிராமங்களில் மருத் துவ முதலுதவி செய்யும் 104 வாகனங்கள், அவசரத் தேவைக்கான 108 ஆம் புலன்சுகள் ஆகியவற்றின் சேவைக்காக புதியதாக 1,088 வாகனங்களை முதல்வர் ஜெகன் மோகன் நேற்று வழங் கினார். ஆந்திர மாநிலம், விஜயவாடா வில் உள்ள பெஞ்சி சந்திப்பில் இந்த வாகனங் களை ஜெகன் மோகன் கொடி யசைத்துத் தொடங்கி வைத்தார்.
இது குறித்து அதிகாரிகள் கூறிய தாவது: பொதுமக்கள் சேவைக்காக ஆந்திராவில் 412 ஆம்புலன்சுகள் புதிய தாக வாங்கப்பட்டன. தற் போது 336 ஆம்புலன்சுகள் உள்ளன. இதுவரை ஆண்டுக்கு 6 லட்சத்து, 33 ஆயிரம் பேருக்குச் சேவை அளிக்கப்ப ட்டது. தற்போது, ஆண்டுக்கு 12 லட்சம் பேருக்கு சேவை அளிக்கும் விதமாக 2 மடங்காக ஆம்புலன்சுகள் அதிகப்படுத்தப்பட்டு உள் ளன.
104 நடமாடும் மருத்துவ வாகனத்தில் ஒரு மருத்துவ அதிகாரி, தரவு நுழைவு ஆபரேட்டர், டிரைவர், ஏஎன்எம் மற்றும் ஆஷா ஊழியர் பணி அமர்த்தப் பட்டுள்ளனர். இவர்கள் தொலைதூர கிராமங் களுக்கு நேரடியாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து இலவச மாக மருந்து வழங்குவார்கள். இதன் மூலம், நகர்ப்புறங்களில் 15 நிமிடங்கள், கிராமங்களில் 20 நிமிடங்கள், மலைவாழ் மக்கள் உள்ள (பழங்குடியினர்) பகுதிகளுக்கு 25 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும். இவற் றில் பணியாற்றும் டிரைவர் களுக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.28 ஆயிரமாகவும், மருத்துவ உதவியாளர் களுக்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிர மாகவும் சம்பளம் உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர். இவ்விழாவில் துணை முதல் வரும், மருத்துவ மற்றும் சுகாதார அமைச்சர் ஆலாநானி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி, கிருஷ்ணா மாவட்ட ஆட் சியர் இம்தியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment