பெரியார் கடவுளை எதிர்த் தார், நையப் புடைத்தார் - இந்து மதத்தை எதிர்த்தார், இந்துக் கடவுள் விநாயகன் சிலையை உடைத்தார், ராமன் படத்தை எரித்தார் என்றெல் லாம் இன்றுவரை பே(ஏ)சிக் கொண்டு திரிகிறார்களே!
இப்பொழுதுகூட தொலைக்காட்சிகளில் தி.க. காரர்கள் இந்து மதக்கடவுள் களைத்தான் கிண்டல் அடிக் கிறார்கள் என்றெல்லாம் பேசப் படுவது கண்கூடு.
நாம் அவர்களைப் பார்த் துக் கேட்கும் கேள்வி. இந்து மதத்துக்குள் எத்தனைக் கட வுள்கள் - அவர்களுக்குக் குடும்பங்கள், குழந்தைகள், குட்டிகள் என்று நிரம்பி வழிகின்றனவே - இந்த இந்து மதத்துக்குள் அனேக பிரிவுகள், பிளவுகள் தாண்டவமாடுகின்ற னவே - அதைப்பற்றி எல்லாம் ஏன் பேசுவதில்லை? இந்து மதத்துக்குள் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் - இன்னொரு பிரிவைச் சேர்ந்த கடவுளை ஏற்றுக்கொள்கிறார்களா? முதலில் அதற்குப் பதில் சொல் லட்டுமே, பார்க்கலாம்.
சிதம்பரம் நடராஜர் கோவி லுக்குள் தில்லைக் கோவிந்த ராஜன் பெருமாள் கோவில் மட்டும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தக் கோவில் பெருமாளுக்கு பிரம் மோற்சவம் நடத்திட, இந்து அறநிலையத் துறையிடம் அனுமதியும் பெற்ற நிலையில் - சிதம்பரம் கோவில் சிவப் பக்தர்கள் போட்டக் கூச்சலும், ஆடிய ஆட்டமும் கொஞ்சமா, நஞ்சமா?
இதுகுறித்து ‘ஜூனியர் விகடன்' இதழ் (1.6.2008, பக்கம் 4) வெளியிட்ட ஒரு தகவல் கவனிக்கத்தக்கது.
சிதம்பரம் நடராஜர் கோவில் பூஜாஸ்தான டிரஸ்டி களில் ஒருவரான ராஜசேகர தீட்சதர் சொன்னதைத்தான் ‘ஜூனியர் விகடன்' வெளி யிட்டது.
அவர் என்ன சொல்லு கிறார்?
‘‘நடராஜர் கோவிலில் பெரு மாள், பரிவாரத் தேவதையாகத் தானிருக்கிறார். பரிவாரத் தேவதைக்கு பிரம்மோற்சவ விழா கிடையாது. இங்கே கோவில் என்ற அமைப்பில் பெருமாள் இல்லை. தனி சன்னதியில் தான் பெருமாள் இருக்கிறார். கோவில் என்றால், ராஜகோபுரம், கொடிமரம், பலி பீடம், கர்ப்பக் கிரகம் எல்லாம் இருக்கவேண்டும். இவர் களிடம் தேரேயில்லை. அதேபோல், வாகன மண்டபம், கல்யாண மண்டபம், தீர்த்தம் என எதுவுமேயில்லை. அப்படி யிருக்க - பிரம் - மோற்சவம் நடத்தவேண்டுமென்று வைணவர்கள் பிடிவாதம் பிடிப்பது மூர்க்கத்தனமான செயல்.''
இப்படியெல்லாம்; வரிசைப் படுத்தி ஆக்ரோசமாகச் சொல் பவர் சிதம்பரம் நடராஜர் கோவில் பூஜாஸ்தான டிரஸ்டி களில் ஒருவரான ராஜசேகர தீட்சதர் என்கிறது ‘ஜூனியர் விகடன்.'
இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம் என்போர் - இந்த நாடு - இந்து நாடு என் போர் - இந்து மதத்தை யாரும் விமர்சிக்கக் கூடாது என்போர் - இப்படி இந்து மதக் கடவுள் களுக்குள்ளேயே ‘‘தோஷம்'' கற்பித்து, மேல் - கீழ் என்று பிளவு ஏற்படுத்தித் தொடை தட்டுகிறார்களே - இதற்கு என்ன பதில்?
முதலில் இந்து மதத்தை ‘ரிப்பேர்' செய்யுங்கள் - பிறகு மற்றவர்களிடம் சவால் விட லாம்!
வைத்தியரே, வைத்தியரே, முதலில் உங்கள் நோயை சொஸ்தப்படுத்திக் கொள்ள வழி பாருங்கள்!
- மயிலாடன்
No comments:
Post a Comment