புதுடில்லி, ஜூலை 8, டீவிட்டர் பக்கத்தில் #பாஜகஒபிசியின்எதிரி #ஙியிறி_பிணீtமீs_ளிஙிசி எனும் தலைப்பில் பலராலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. பேராசிரியர் ஊடக வியலாளர் மற்றும் சமூக செயற் பாட்டாளர் திலிப் மண்டல் தம்முடைய டீவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்தியாவில் மூன்றில் ஒருவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், இதன் படி மூன்றில் ஒருவர் துணை வேந்தராக, பேராசிரியராக, நீதிபதியாக, மாநில ஆளுநராக, அமைச்சரவைச் செயலாளராக இருக்க வேண்டும், ஆனால் என்ன நடக்கிறது? இந்தி யாவின் முக்கால் பாக இதர பிற் படுத்தப்பட்டவர்கள் முட்டாள் களா? அல்லது அவர்கள் தகுதி யில்லாத வர்களா? இதர பிற்படுத் தப்பட்டவர்கள் சோம்பேறிகளா? அல்லது எதற்குமே ஆகாத நபர் களா?
நீங்கள் இல்லை என்று கூறி னால் நமக்குக் கிடைக்கும் அனைத் தையும் யார் பறித்துக் கொள் கிறார்கள்?
எனக்கு மோடியின் மீதும் பாஜக ஆட்சியின் மீதும் பெரும் அய்யம் எழுகிறது,
பதில் கூறுவாரா மோடி? இவ் வாறு பேராசிரியர் ஊடகவியலா ளர் மற்றும் சமூக செயற்பாட்டாள ரான திலிப் மண்டல் டீவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment