சூளகிரி.ஜூலை8, சூளகிரி அருகே சாமனப்பள்ளி கிராமத்தில், அய்.டி.பி.எல். எண்ணெய் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.
இந்த நிலையில் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், இந்த திட்டத்திற்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி, மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தியவாறு விவசாய நிலங்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு, சூளகிரி வட்ட தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் முனியப்பன், மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஒருங் கிணைப்பாளர் சாந்தகுமார், நஞ்சுண்டன், சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்காக விவசாய நிலங் களை கையகப்படுத்தக்கூடாது,
நெடுஞ்சாலையோரமாக குழாய்களை பதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், கரோனா மக்களை வாட்டி வதைக்கும் நேரத்தில், விவசாய நிலங்களை கையகப் படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள்.
No comments:
Post a Comment