திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் 'விடுதலை விளைச்சல் விழா' சிறப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் 'விடுதலை விளைச்சல் விழா' சிறப்புக் கூட்டம்


திருப்பத்தூர், ஜூலை 1 திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கடந்த 21.6.2020 ஞாயிறு மாலை 6 மணிக்கு 'விடுதலை 86ஆம் ஆண்டு விழா விளைச்சல்' சிறப்புக் கூட்டம் மாநில மாணவர் கழகச் துணைச் செயலாளர் எ. சிற்றரசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தொடக்கத்தில் இ. ஓவியா 'கடவுள்' மறுப்பு கூறினார். சட்டக் கல்லூரி மாணவி ச. மணிமொழி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.


மாநில மாணவர் கழகச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்கவுரையாற்றினார். அவர் தனது உரையில் "பெரியார் பிஞ்சுகளாக பழகு முகாம் வந்த தோழர்கள் இன்று மாணவர் கழகக் கூட்டத்தை நடத்துவது மகிழ்வாக உள்ளது என்றும் மாணவர் கழகம் எவ்வாறு எல்லாம் பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.


நிகழ்விற்கு முன்னிலை வகித்த மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள மத்தூர் மணி மொழி நிலவன் ஆகியோர் பாராட்டுக் குரியோர் என்றும் தொடர்ந்து நமது மாவட்டம் எல்லா நிகழ்வுகளிலும் மாநில அளவில் சிறப்பிடம் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு அணியினரும் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.


"புரட்சியாளர் பெரியார்" என்ற தலைப்பில் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார்செல்வன்  உரையாற்றினார். பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறியது மாணவர், இளைஞர் மற்றும் அனை வருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.


மாவட்ட மாண வர் கழக தலைவர் நாத்திகன், மகளிரணி தலைவர் கவிதா, பகுத்தறிவாளர் கழகத் தின் மாநில துணைத் தலைவர் அண்ணா சரவணன், மகளிரணி மாநில பொருளாளர் எ. அகிலா, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, அமைப்புச் செயலா ளர் ஊமை. ஜெய ராமன் ஆகியோர் உரையாற்றினர்.


திராவிடர் கழக மாநில அமைப்பாள ரும், மாணவர் கழக ஒருங்கிணைப்பாள ருமான உரத்தநாடு இரா. குணசேகரன் நிறைவுரையாற்றி னார். மாணவர்கள் தொடர்ந்து 'விடுதலை' படிக்க வேண்டும்; பரப்ப வேண்டும், வளர்ச்சி நிதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மத்தூர் ஜா.இர. நிலவன் நன்றி கூறினார்.


மாநில  மாணவர் கழக  அமைப்பாளர் இரா. செந்தூரபாண்டியன் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.


No comments:

Post a Comment