தமிழக உளவுப்பிரிவு அய்.ஜி.யாக  ஈஸ்வரமூர்த்தி  நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 2, 2020

தமிழக உளவுப்பிரிவு அய்.ஜி.யாக  ஈஸ்வரமூர்த்தி  நியமனம்


சென்னை, ஜூன் 2,  சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணி யாற்றிய ஈஸ்வரமூர்த்தி அய்.பி.எஸ். அவர்களை உளவுப் பிரிவு அய்.ஜி.யாக நியமித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2004 முதல் 2005ஆம் ஆண்டு வரையிலும், 2014 முதல்  2016 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் வரையிலும் உளவுப்பிரிவில் பல்வேறு துறைகளில் ஈஸ்வரமூர்த்தி பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இவர் ஏற்கெனவே உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு அய்.ஜி. பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment