திராவிடர்களுக்கு திருப்பணி செய்ய வந்து, அவர்தம் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஏற்றமிகு ஏடு நம் விடுதலை நாளே- அதன் 86ஆம் ஆண்டு பிறந்த நாளான 1.6.2020 அன்று நம் உள்ளொளியாம் தமிழர் தலைவர் அவர்கள் காணொலியில் தோன்ற நம் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளித்தார். விடுதலையின் சிறப்புகள் நம் செவிகளில் வந்து விழுவதை விட நாம் விரும்பத்தக்கதொரு விருந்து வேறேது? விருந்தில் இரண்டறக் கலந்தோம், சுவைத் தோம், மகிழ்ந்தோம். அடடா! தெவிட்டாத விருந்து. நம் உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊறு விளைவிக்காத உணவு விருந்து முடிந்தபின் வாசகர்களின் வினாக்களுக்கு ஆசிரியர் அவர்கள் விடையளித்தார்கள்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் வினா எழுப்ப விரும்புவோர் கையை உயர்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார். ஆசிரியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி முக்கி யமானவர்களுக்கு வாய்ப்பிருக்கும் என் போன்றோர்க்கு வாய்ப்பிருக்காது என்று தான் கருதினேன். எதற்கும் இருக்கட்டும் என்று நானும் தயக்கத்துடன் கையை உயர்த்தினேன்.
என்ன வியப்பு! சற்று நேரம் கழித்து என் பெயரை தோழர் பிரின்சு அவர்கள் ஒலித் தார்கள். நான் திகைத்துப் போனேன். உலக மெலாம் அறியப்பட்ட ஓர் உயர்ந்த தலைவ ருடன், எங்கோ ஓர் மூலையில் கிடக்கும் எளியவனான நான் பேசப்போகிறேனா என்பதுதான் அந்த திகைப்புக்குக் காரணம். நான் பேசவே தொடங்கவில்லை, அதற்குள் ஆசிரியர் அவர்கள் முந்திக் கொண்டு நான் (நான் என்பதில் என் இணையரும் அடக்கம்) விடுதலைக்கு மாதந்தோறும் நன்கொடை கொடுப்பதைக் குறிப்பிட்டுவிட்டு, "முதலில், உங்களுக்கு நன்றி!" என்று என்னைப் பார்த்துச் சொன்னார்கள். மேலே நான் குறிப்பிட்ட திகைப்பு அடங்குவதற்குள் எனக்கு மேலும் ஒரு திகைப்பு. உண்மையில் நான் திக்குமுக்காடித் தான் போனேன். ஆசிரியர் போன்ற உயர்ந்த தலைவர் நன்றி சொல்லக்கூடிய அளவுக்கு நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. ஆனா லும், ஆசிரியர் அவர்கள் சொல்கிறார். அது தான் ஆசிரியர் அவர்களின் உயர்ந்த பண் பாடு. நான் உயர்படிப்பு படித்தவனல்லன்; எளிய படிப்புதான் என்றாலும், 'விடுதலை' என்றொரு காப்பரண் நமக்கு இல்லாது போயிருந்தால், அந்த படிப்பைக்கூட படித்திருக்க முடியாது என்பதை உளமாற நான் உணர்கின்றேன். குலக்கல்வி நம் குடியைக் கொன்றிருக்குமே! பிறகு நமக்குப் படிப்பேது? வேலை ஏது? வாழ்வேது? அந்த நன்றியை நாளும், நாளும், நினைத்து, நினைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதால் தான், என்னால் முடிந்த சிறு நன்கொடையை, என் வாழ்நாள் முழுக்க வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்து விட்டேன். இது பாராட்டு பெறுவதற்காக அல்ல; நன்றி காட்டுவதற்காகத்தான்.
இப்படிப்பட்ட, நம் நன்றிக்குரிய நாளே டாம் "விடுதலை" நாளேடு இத்தனை ஆண்டு காலம் வெளிவந்து கொண்டிருக் கிறது என்றால், அதற்கு நம் ஆசிரியர் அவர்கள்தான் காரணம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? அதற்காக நாம், ஆசிரியர் அவர்களுக்கு எத்தனை கோடி நன்றிகளைச் சொல்ல வேண்டும்! எத்தனை தலைமுறைக ளுக்குச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்! இது வெறும் புகழ்ச்சி அல்ல; நன்றியின் உணர்ச்சி.
நன்றி பெருக்குடன்
க.ச.பெரியார் மாணாக்கன்
பூவிருந்தவல்லி
No comments:
Post a Comment