மதுரை அண்ணாநகர் பகுதியில் முடி திருத்தகம் நடத்தும் மோகன் தன் மகளின் படிப்பிற்காக சேமித்த பணம் ரூ.5 இலட் சத்தை கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை களுக்கு வழங்கும்படி தன் மகள் நேத்ரா 9ஆம் வகுப்பு மாணவி வற்புறுத்தியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களை அழைத்து உணவுப் பொருள்களை வழங்கினார். நேத்ராவின் தாராளமான மனிதநேய கொடைச் சிந்தனையைப் பாராட்டி அய்.நா. மன்றம் வறுமை ஒழிப்பதற்கான நல்லெண்ண தூதுவராக நியமித்து பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. இது குறித்து தமிழர் தலை வர் அவர்கள் வாழ்வியல் சிந்தனைகளில் பாராட்டியதோடு நேரடியாக சென்று கழகத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவிக்க சொன்னபடி மாலை 7 மணியளவில் தோழர் களோடு சென்று சால்வை அணிவித்து புத் தகங்களை வழங்கினார். அமைப்பு செய லாளர் வே. செல்வம். கழகத் தோழர்கள் வரு கிறார்கள் என்று தெரிந்தவுடன் வீட்டிற்கு வெளியே வந்து மகிழ்வுடன் வரவேற்றனர். இவர்களோடு இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளரும் பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னாள் தலைவருமான ஜோஸ் மற்றும் அவருடைய தோழர்களோடு கலந்து கொண்டார். தமிழர் தலைவர் வாழ்த்து பிரதிகளை அவர்களிடம் கொடுத்த போது மிகுந்த மகிழ்ச்சியடைந்து தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அனை வருக்கும் குளிர்பானம் வழங்கி உபசரித்தனர். பாராட்டு நிகழ்வில் அமைப்புச் செயலாளர் வே. செல்வத்துடன் மண்டல செயலாளர் நா. முருகேசன்/இராதா மாவட்ட துணை செய லாளர் சுப. முருகானந்தம், இளைஞர் அணி தலைவர் க. சிவா, செயலாளர் பேக்க,ரி கண்ணன் பொ. பவுன்ராசு, மாரிமுத்து ஜோஸ் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment