திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளருமான வ.அன்பழகன் அவர்களின் தாயார் திருமதி வ.கண்ணம்மாள் (வயது 86) வயது முதிர்வு காரணமாக செய்யாறு பகுதி ஏழச்சேரி கிராமத்தில் இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று (3.6.2020) மாலை 3 மணியளவில் நடைபெற்றது. வ.அன்பழகனின் தந்தை ஏழாச்சேரி வரதன் அவர்கள் சுயமரியாதை குடும்பத்தைச் சேர்ந்தவர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர்களின் பேரன்பை பெற்றவர். காலஞ்சென்ற அம்மையார் வ.கண்ணம்மாள் அவர்கள் அறிஞர் அண்ணா உள்பட பல தலைவர் களுக்கு விருந்தோம்பல் நல்கிய பண்பாளர் ஆவார். தொடர்புக்கு: வ.அன்பழகன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் - 9444044500
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment