சிவகங்கை மண்டல, காரைக்குடி விடுதலை வாசகர் வட்ட சிறப்பு காணொலி கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 9, 2020

சிவகங்கை மண்டல, காரைக்குடி விடுதலை வாசகர் வட்ட சிறப்பு காணொலி கருத்தரங்கம்


காரைக்குடி ஜூன்9,  சிவகங்கை மண்டல திராவிடர் கழகம் மற்றும் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் விடுதலை விளைச்சல் பெருவிழா காணொலி வழி கூட்டம் நடை பெற்றது.


இதில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மானமிகு சுயமரியாதை காரர் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் இணைத்து நடத்தப் பட்டது.  கூட்டத்திற்கு மண்டல தலைவர் சாமி.திராவிடமணி தலைமை வகித்தார். கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றினார். சிவகங்கை மாவட்ட தலைவர் உ.சுப் பையா, இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கோ.வ.அண்ணா ரவி, காரைக்குடி மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் கு.வைகறை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக சொற் பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா அறிமுகவுரையாற்றினார்.


தொடர்ந்து மானமிகு சுயமரி யாதைகாரர் கலைஞர் என்ற தலைப் பில் தி.மு.க.மாநில இலக்கிய அணி தலைவரும் மேனாள் அமைச்சருமான மு.தென்னவன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் 86 ஆண்டு களாக தமிழின் எழுச்சிக்கு காரண மாக தனது பணியை செய்து வரும் விடுதலை நாளிதழை பாராட்டியும் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் தொண்டுகளையும் நினைவு கூற வேண்டும். பெரியார் விட்டுச்சென்ற பணிகளை பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் தொடர்ந் தார்கள். இன்றைக்கு  நாடு மிகப்பெரிய அளவில் சோதனையை சந்தித்து வருகிறது.மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாடு விடுதலை அடைந்ததை போல நாமும் விடுதலை பெற இந்த விடுதலை நாளிதழை தாங்கி பிடிப்போம். வாங்கி படிப்போம். நாடு ஒரு பெரிய புரட்சியை சந்திக்க விடுதலை வாசகர்கள் தயாராக வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் விட்டுச்சென்ற பணிகளை செய்து முடிக்க தளபதி ஸ்டாலின் அவர்களும், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர் களும் இருக்கிறார்கள். அவர்களது பணிக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.


மேலும், விடுதலை பாதுகாப்பு நிதியாக எனது சார்பில் முதற்கட்ட மாக ரூ 2000/- நன்கொடையாக அளிக்கிறேன் என்று கூறி முடித்தார். இந்த காணொலி கருத்தரங்கில் வழக் குரைஞர் ச.இன்பலாதன், பொதுக் குழு உறுப்பினர் மணிமேகலை, சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் அனந்தவேல்,  காரைக்குடி மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, சிவகங்கை நகர தலைவர் இர.புக ழேந்தி, மேனாள் மண்டல செய லாளர் சாமி.சமதர்மம், புதுச்சேரி மாநில தலைவர் சில.வீரமணி, மதுரை மண்டல தலைவர் மா.பவுன்ராசா, செல்லத்துரை, ஆத்தூர் செல்வம், காரைக்குடி பிரவீன், மா.பொடையூர் வெங்கட் ராசா, உரத்தநாடு உத்தி ராபதி, தஞ்சை ஏ.வி.என்.குணசேகரன், தங்கவேலு, வி.சி.வில்வம்,திருவையாறு கண்ணன், வேலூர் கலைமணி, வட மணப்பாக்கம் தமிழ்மொழி, செல்வ ராஜ் செவந்தன், பேரா.மு.சு.கண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சிவகங்கை மண்டல செய லாளர் அ.மகேந்திரராசன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment