சேகர் குப்தா: நீங்கள் உங்களது அறிக்கை ஒன்றில், ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? என்று கேட்டிருக்கிறீர்களே?
கலைஞர்: அது என்ன ஒரு பெரிய கேள்வியா?
சேகர் குப்தா: இவ்விஷயத்தில் காங்கிரசில் உள்ளவர்கள் மகிழ்ச்சி யாக இல்லை. நீங்கள் தேவையற்ற அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள் என்று கருதுகிறார்கள். வால்மீகி ராமாயணத்தை மேற் கோள் காட்டி ராமர் குடித்தார் என்று கூறினீர்கள்...
கலைஞர்: ஆமாம். நான் வால் மீகி ராமாயணத்தைத் தருகிறேன். நீங்கள் தயவு செய்து அதைப் படித்துப் பாருங்கள். எங்களுக்கு அந்தத் திட்டம் (சேது சமுத்திரம்) வேண்டும்! நான் இப் பொழுது முதலமைச்சராக இருக்கிறேன். ஆனாலும், நான் ஒரு சுயமரியாதைக் காரன்! நாங்கள் சுய மரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்! பெரியாரின் மாணவர்கள்!
சேகர் குப்தா: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?
கலைஞர்: ஆமாம். ஒரே ஒரு கடவுளை நம்புகிறேன்.
சேகர் குப்தா: எந்தக் கடவுளை நம்புகிறீர்கள்?
கலைஞர்: எனது மனசாட்சியை.
(என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் கலைஞர் அளித்த பேட்டியிலிருந்து)
No comments:
Post a Comment