இராமாயணம் ஏன் எரிக்கப் படவேண்டும் என்ற சொற்போரில் அறிஞர் அண்ணா கையாண்ட அணுகு முறையும், இன்றைய போக்கும்
கருத்து மோதல்கள், கருத்து வேறு பாடுகள்
ஜனநாயகத்தின் அடித்தளம்.
யாருடனும் கருத்து மாறுபடலாம்.
பண்புகளை இழந்து தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதால் யாருக்கும் பயன் தரா!
அரிப்பு, அரிப்பு
என்ன செய்ய ?
சொறி! சொறி !!
சுகம்! சுகம்!!
குருதி சொட்டும்
பின் கொட்டும்
இது உடல் நோயின் அடையாளம் மட்டுமல்ல, மனநோயின் தொடக்கம்.
இது போன்ற தாக்குதல், சொறிதல் போக்கு ஊடகங்களிலும் சமூக ஊட கங்களிலும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது நிகழலாமா!
இதை முற்றிலும் அறிந்து ஜன நாயகத்தின் மாண்பினைக் கடைப் பிடித்து வழிகாட்டியாகப் பேரறிஞர் அண்ணா இன்றும் ஒளிர்கிறார்.
இராமாயணம் ஏன் கொளுத்தப் படவேண்டும்?
என்ற தலைப்பில் நாவலர் சோம சுந்தர பாரதியார், தமிழ் அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோரிடம் ஒரே மேடையில் விவாதம் செய்த பாங்கு இன்றைய தலைமுறைக்கு நல் பாடமாக உள்ளது.
தந்தை பெரியாரின் தளபதியாக இரு பேரறிஞர்களிடம் சொற்போர் நடத்தினார்.
நாவலர் சோமசுந்தர பாரதியாரின் எதிரணியில் நின்று களம் கண்டார்.
அந்நிகழ்வில் அண்ணா
"கட்டாய இந்தியை எதிர்த்துப் போராடிய காலத்திலேயே நெரித்த புருவமும், கொதித்த இரத்தமும், துடித்த நெஞ்சமும், முறுக்கேறிய மீசையும் இன்று ஆரியத்துக்கு துணை போகாது என்பதை நானறிவேன்.
ஆகையால் இன்று நடைபெறும் சொற்போர் என்பது, மேலான முறையிலே மட்டுமல்ல, நேசமுறையிலே நடைபெறும்." என முழக்கம் இடு கிறார்.
கண்ணியம் போற்றுகிறார்.
இந்தச் சொற்பொழிவில் அண் ணாவின் இரண்டு கருத்துகள் நாம் யாரை எதிர்க்க வேண்டும், நமது நோக்கம் எப்படி அமைய வேண்டும் என்பதைச் சுட்டுகின்றன.
"கம்ப இராமாயணத்திலே சங்க நூற்களிலே காணப்படும் அணிகளும், அலங்காரங்களும், உவமைகளும் நிரம்ப உபயோகிக்கப் பட்டிருகின்றன. குறள் நன்றாக நுழைக்கப் பட்டிருக் கிறது." எனச் சுட்டி, கம்ப இராமாய ணம் தந்த கேடுகளை இலக்கிய ஆதா ரங்களை வைத்தே பல கருத்துகளை முன் வைத்து அண்ணா உரை நிகழ்த் தினார்.
"தலைவர் பாரதியார், கம்பன் கவி சுவை போன்ற சுவையுடன் கவி இயற்ற முடியும்;
செய்யட்டும். அத்தகைய கலை வளர்ச்சியை நாங்கள் வரவேற்கி றோம்"
"சுயமரியாதைக்காரர்கள் தமிழரிடையே சீர்திருத்த பிரச்சாரம் செய்கின்றனர்.
பார்ப்பனன் காலில் வீழ்ந்து தட் சணை தந்து மானத்தையும் பொரு ளையும் இழக்காதே;
அவன் ஜாதியிலே உயர்ந்தவன்
நீ தாழ்ந்தவன் என்பதை ஏற்காதே;
மேலுலகம் என்று நம்பிப் பொரு ளைப் பார்ப்பனர்தாசனிடம் தந்து அவனை உயர்த்தாதே," என்று நாங் கள் கூறுகிறோம்.
அதே மக்களிடம் கம்ப இரா மாயணப் பிரசங்கம் நடக்கிறது.
அதிலே மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களிலே ஒருவராகிய இராமன், காடேகும் போது உடன் வரவேண்டிய சீதையை அழைத்துச் செல்லும் முன் பிராமணருக்குத் தானம் தந்தார் எனச் சொல்வதை மக்கள் பயபக்தியுடன் கேட்கின்றனர்.
ஆண்டவனின் அவதாரமே பிராமணருக்குத் தானம் தந்தார். திதி நடத்தினார். சடங்குகள் செய்கிறார்;
எனவே நாமும் பிராமணருக்குத் தானம் தர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் வராதா என்கிறார் அண்ணா.
"இராமர் காடேகுமுன்,பொருளை மிதிலைக்கு அனுப்பி இருக்கக் கூடாதா?
அயோத்தியிலே ஏழை எளியவ ருக்குக் கொடுக்கக் கூடாதா?" என அறிஞர் அண்ணா நாவலர் சோமசுந் தர பாரதியாரைப் பார்த்துக் கேள்வி களைத் தொடுக்கிறார்.
இந்த உரையில் சோமசுந்தர பாரதியாரை உயர்த்திப் பிடிக்கிறார்.
இராமாயணத்தை யார் பயன் படுத்திக் கொள்கிறார்கள்? யார் பணத்தை, பலனைப் பெறுகிறார்கள்? என அன்று அண்ணா சோமசுந்தர பாரதியைப் பார்த்து எழுப்பிய கேள்விகளுக்குப் பின்னால் இருந்த கருத்துகள், எழுந்த அச்சம் எல்லாம் அப்படியே நடந்தேறியுள்ளதல்லவா?
அரசியல் மட்டுமல்ல, மதசார்பற்ற அரசும், உச்ச நீதிமன்றமும் ராமன் விளைவால் வீழ்ந்து விட்டதே!
ஒரு மேடையில் நின்று சோமசுந்தர பாரதியாரிடம் களம் கண்டபோது இராமாயணத்திற்கு எதிரான புயல் அண்ணாவின் உரையில் வீசியது.
ஆனால் கனிவும், பணிவும் கலந்த தென்றலாக அண்ணாவின் உரை நாவலர் சோமசுந்தர பாரதியைப் போற்றியது.
இந்த நிகழ்வு நடந்து பல ஆண்டு கள் கடந்தாலும் அண்ணா சோமசுந் தர பாரதியை எப்படி நினைவில் வைத்துப் போற்றினார் என்பதை,
93 வயதைக் கடந்து வாழும் நாவ லர் சோமசுந்தர பாரதியின் பெயரன் திரு.லட்சுமி காந்தன் பாரதி என் னிடம் பகிர்ந்து கொண்ட கருத்து என் நினைவிற்கு வந்தது.
1967 ஆம் ஆண்டு முதல்வராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்ற பிறகு புதிதாக அமைக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆட்சித் தலைவராக திரு.லட்சுமி காந்தன் நியமிக்கிறார்.
காஞ்சிபுரம் வந்து சென்னைக்குத் திரும்பிச் செல்லும் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னறிவிப்பின்றி அண்ணா செல்கிறார்.
கட்டமைப்பு வசதிகள் இல்லாத தால் திரு.பாரதி ஓர் அறையில் இருந்து மாவட்டப் பணிகளை மேற் கொள்கிறார்.
எதிர்பார்க்காத நிலையில் முதல் வர் அண்ணா தன் அலுவலகம் நுழை வதைப் பார்த்து பாரதி வியப்படை கிறார்.
பாரதியைப் பார்த்து ஞாயிற்றுக் கிழமை விடுமுறையில் சென்னைக்கு தானே போகப் போகிறீர்கள், என் காரில் சென்று விடலாம் என்கிறார் அண்ணா.
பயணமும் மேற்கொள்கிறார்.
எப்படிப்பட்ட எளிமை!
இந்தித் திணிப்பைக் கண்டனம் செய்த, போராடிய பாரதி குடும்பத் திற்கு அண்ணா அளித்த உயர் மரி யாதை !
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று பெயரன் பாரதியை அழைத் துச் சென்ற அண்ணாவின் பாங்கு இதைக் காட்டுகிறது!
இந்நிகழ்வை என்னோடு இணைந்து பணியாற்றிய மூத்த திட்டக் குழு உறுப்பினர் திரு .லட்சுமி காந்தன் பாரதி பல முறை நெகிழ் வோடு இதைக் குறிப்பிட்டுள்ளார்.
தாத்தா பாரதியோடு எதிரணியில் நின்று வாதாடியது தமிழ் வெல்ல வேண்டும், சனாதனம் சாயவேண்டும் என்பதற்குத் தானே!
அண்ணா காட்டிய கண்ணியத்தை நாமெல்லாம் பின்பற்றுவோமாக!
சமூக ஊடகங்களில் கருத்து வேறு பாடுகள் தோன்றும் போது கருத்துக ளுக்கு பதில் கருத்து அளிக்கும் போது அண்ணா கடைப்பிடித்த அணுகு முறையைப் போற்றுவோம்..
- இளஞ்செழியன்
No comments:
Post a Comment