ஒற்றைப் பத்தி - கலைஞர் யார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 3, 2020

ஒற்றைப் பத்தி - கலைஞர் யார்


‘‘கடந்த சில தினங்களுக்கு முன் டில்லி மாநகரில் ராமலீலா கொண்டாடினராம் வைதீகர் கள். இராவணனையும், அவ னது சந்ததிகளையும் அழித்த ராமனின் திருநாளாம் அது.


அந்த சரித்திர எழுத்தாளர் (நேரு) பேரனுடன் சென்று இராவணனையும், கும்பகர்ண னையும், இந்திரஜித்தையும் கொடும்பாவியாக்கி, எரிக்கும் காட்சி - அல்ல, அல்ல; விழா வைக் காணச் சென்றிருக்கிறார்.


இந்திய சர்க்காரின் செய்தி இலாகா அந்த கோலாகலத்தைத் திரைப்படமாக்கி கொட்டகை யில் திரையிட்டனர்.


திரையிலே காட்சி! பக்கத் திலே இருந்த நண்பர் கருணா நிதி கேட்டார், ‘‘நாம் ராமன் உருவம் செய்து கொளுத்தி னால் என்ன?''


நான் பதில் தரவில்லை. நண்பர் கேட்டதுபோல் செய் தால் யார்தான் என்ன செய்ய முடியும்?


- அறிஞர் அண்ணா


(‘திராவிட நாடு', 28.10.1951)


முத்தமிழ் அறிஞர் மான மிகு கலைஞர் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாளில் இந்த உணர்வை நினைவு கூர் வது மிகவும் பொருத்தமாகவே இருக்கும் அல்லவா!


450 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ராமன் கோவிலைக் கட்டத் துடித்துக் கொண்டு இருக்கும் இந்தக் காலகட்டத் தில், ராம ராஜ்ஜியத்தை உண் டாக்குவோம் என்று ஓங்கிக் குரல் கொடுக்கும் இந்துத்துவா சக்திகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கையில், நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் இடம்பெற்றிருக்கும் 29(24+5) தி.மு.க. உறுப்பினர்களின் தலை வராக இருக்கக் கூடிய மானமிகு கலைஞரும் சரி, அவருக்கும் சேர்த்துத் தலைவராக இருக்கக் கூடிய அறிஞர் அண்ணாவும் சரி எந்த இனத்தின் - இயக் கத்தின் - இலட்சியத்தின் குறி யீடுகள் என்பதை ஆளும் தரப் பும் சரி, மற்ற கட்சியினரும் சரி, தெரிந்துகொள்ளவேண்டும்.


ராமர் பாலம் பிரச்சினை பற்றி என்.டி.டி.வி. சார்பில் சேகர் குப்தா எழுப்பிய வினா வுக்கு ராமன் எந்த இன்ஜினி யரிங் கல்லூரியில் படித்தான் என்ற கேள்வியை எழுப்பிய வரும் கலைஞரே! (‘முரசொலி', 29.10.2007).


சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) ‘சக்ரவர்த்தி திருமகன்'பற்றி எழுதியபோது, ‘சக்ரவர்த்தியின் திருமகன்' என்று அதற்கு மறுப்பு எழுதிய வரும் மானமிகு கலைஞரே!


நூல் வெளியீட்டு விழா ஒன்றில், இராவணனைப்பற்றி ஒரு கவிஞர் பாட, ‘தயவு செய்து இராவணனை குறைகூறி, என் நெஞ்சைப் புண்படுத்தவேண் டாம் (‘முரசொலி', 19.10.2008) என்று சொன்னவரும் நமது மானமிகு சுயமரியாதைக்கார ரான கலைஞரே!


 - மயிலாடன்


No comments:

Post a Comment