ஊரடங்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. அதில் மனச்சோர்வு என்பது முக்கியமானது. அப்படி ஒரு சூழல் தோழர்களுக்கு வந்து விடக்கூடாது என்பது ஆசிரியர் அவர்களின் கவலையாக இருந்தது!
ஊரடங்கு தொடங்கிய ஓரிரு நாளிலே இதுகுறித்த அறிக்கைகளை, ஆலோசனைகளை ஆசிரியர் அவர்கள் எழுதத் தொடங்கி விட்டார்கள். அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டதே காணொலி வழி சந்திப்புகள்!
பரிணாமம் பாரீர்!
பத்திரிகை வழி எழுத்துகள், கைப்பேசி வழி பேச்சுகள் இருந்த போதிலும், முகம் பார்த்து உற்சாகம் பெற இந்தக் காணொலி வழி பெரும் பயனாய் இருந்தது.
அவ்வகையில் 63 கழக மாவட்டங்களிலும் கலந் துரையாடல் கூட்டங்கள் நடைபெற்றன. தவிர பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலும் இது தொடர்ந்தது.
இதனைத் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்த வந்த நிலையில், அந்தந்த மாவட்டக் கழகமே தங்கள் மாவட்டத்திற்குப் பல்வேறு தலைப் புகளில் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கின. இது மேலும் விரிவடைந்து திராவிடர் கழகத்தின் அத் தனை துணை அமைப்புகளும் நிகழ்ச்சிகளை நடத்த ஆர்வம் காட்டின.
விடுதலையில் பிரச்சாரக் களம் என வருவது போல, ஜூம் (ஞீளிளிவி) செயலியின் இணைப்பு (லிமிழிரி) வராத நாட்களே இல்லை என்று ஆனது. ஒரு மாவட்ட நிகழ்ச்சியில் மாநில அளவில் மக்கள் பங்கேற்கும் சூழலும் உருவானது.
அதனைத் தொடர்ந்து முழுக்கவும் ஆண்களே பங்கேற்கும் நிகழ்ச்சிகளும், பெண்களே பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் நடந்தன. மேலும் குறிப்பிட்ட பேச்சாளர்களே தொடர்ந்துப் பேசி வந்த நிலையில் புதியவர்களை உருவாக்கும் முயற்சியும் நடைபெற்றது. அவ்வகையில் புதிய தோழர்களைக் கொண்ட காணொலி கூட்டங்களும் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாகத் திருச்சி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 31.05.2020 அன்று "பெரியாரியக் குழந்தைகளுடன் உரையாடல்" என்கிற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெரியாரியக் குழந்தைகளுக் கான முதல் காணொலி கூட்டம் இதுதான்.
இந்நிகழ்ச்சியில் சென்னை கவி நிசா, காரைக்குடி யாழிசை, திருச்சி கியூபா, திருச்சி யாழினி, தஞ்சாவூர் கவின், கோயம்புத்தூர் யாழினி ஆகியோர் பங்கேற் றனர். இவர்கள் 5, 8, 9, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவர்.
உரையாடி மதிவதனி
இவர்களை ஒருங்கிணைத்து, கூடவே உரை யாடியவர் சட்டக் கல்லூரி மாணவர் மதிவதனி.
பெரியார் பிஞ்சுகளின் சுய அறிமுகம், பெரியார் பிஞ்சு என்று அழைப்பதில் ஏற்படும் உணர்வுகள், பெரியார் யார்? அவரிடம் பிடித்த விசயம்?, உங்க ளுக்குத் தெரிந்த ஒரு கதை சொல்லுங்களேன், இரண்டு வரி என்றாலும் ஒரு பாட்டு பாடுங்களேன், கரோனா குறித்த உங்கள் பார்வை?, ஊரடங்கு நேரத்தை எப்படி கழிக்கிறீர்கள்? தொலைக்காட்சி பார்ப்பீர்களா? எவ்வளவு நேரம்?, கடைசியாகப் பார்த்த படம் என்ன? அதிலிருந்து கற்றது என்ன?, இந்தத் தொடர் விடுமுறையில் பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்கள்? நீங்கள் எப்படி அதைப் புரிந்து கொள்கிறீர்கள்? பள்ளி மற்றும் நண்பர்களின் பிரிவு எத்தகையது? போன்ற கேள்விகள் கேட்கப் பட்டது. இதற்கான பதிலை உரையாடல் வடிவத்தில் வெகு சிறப்பாகப் பதிவு செய்தார்கள் பெரியாரியக் குழந்தைகள்.
அதேபோன்று எந்த உணவுப் பொருள் பிடிக்கும் என்கிற கேள்வியும், அதில் உள்ள நன்மை, தீமைகள் குறித்தும் பேசப்பட்டது. இதை ஒரு விளையாட்டு வடிவில் சுவையாக எடுத்துச் சென்றார் மதிவதனி.
பொதுவாக நமது குழந்தைகள் பெரியார் குறித்துச் சிறப்பாகப் பேசுகிறார்கள், கற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்கள். நாம் அவர்களிடம் பேசுவதைவிட, அவர்களைப் பேசவிட்டு, இறுதியாக நம் கருத்துகளைக் கூறினால் இருவருக்குமே சிறந்த பயனை அது அளிக்கக்கூடும்!
ஆக இந்த வகையிலான குழந்தைகள் உரையாடல் தேர்ந்த வடிவமாகவே இருக்கிறது. இதில் மேலும் சில கேள்விகள் இணைக்கப்பட்டு. மனோவியல் ரீதியாகவும் குழந்தைகளைப் பழக்கும் முயற்சியில் நாம் யோசிக்க வேண்டும்.
விடுதலை விளைச்சல்!
விடுதலையின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாளில் தோழர்கள் தங்களுக்குள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு நேற்று மகிழ்ந்தனர். அதே நாளில் "விடுதலை விளைச்சல் விழா" எனும் தலைப்பில் ஒரு சிறப்புக் காணொலி கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் "விடுதலை 86" - இன் வரலாறுகளைச் சுவைப்படவும், உணர்வு பெறவும் எடுத்துக் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!
தமிழ்நாட்டில் ஏராளமான பத்திரிகைகள் வெளியாகின்றன . அவற்றிற்கும் விடுதலை நாளிதழுக்கும் உள்ள வேறுபாடுகளை இளைய தலைமுறையிடம் எடுத்துக் கூற வேண்டும்!
ஏனைய பத்திரிகைக்கும், விடுதலை நாளிதழுக்கு உள்ள வேறுபாடு என்ன? எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? அதேபோல விடுதலையின் 86 ஆண்டுக் கால சாதனைகள், விடுதலை என்பது நாளிதழ் அல்ல; சமூகத்தின் ஆவணம்!
அதேபோல சமூக மாற்றத்திற்கான விடுதலையின் தீர்மானங்களும், அதன் சட்டங்களும்!
மேலும் நமக்குத் தேவையான செய்திகள் எங்கு கிடைக்கும்? குறிப்பாகச் சிந்திக்க கூடிய விசயங்களை யார் தருவார்? என்பது குறித்தெல்லாம் இளையவர்களிடம் பேச வேண்டும்.
கொள்கைப் பத்திரிகை என்பதால் படிப்போர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சமூக மாற்றத்திற்கான பெரும் விளைச்சலைத் தந்தது விடுதலை தான் என்கிற வரலாற்றைச் சொல்ல வேண்டும்!தொடர்ந்து நடைபெறும் காணொலி கூட்டங்களில் எங்கள் நாளிதழ் விடுதலை என்கிற எண்ணத்தை, பெருமிதத்தை, ஒப்பீட்டு அளவில் இதன் உயர்தரத்தை எடுத்துக் கூறுவோம்! பெருமிதம் வளர்ப்போம்!!
-- - தொகுப்பு: வி.சி.வில்வம்
No comments:
Post a Comment