திருச்சி, மே 8- திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்து பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் செயல்பட்டு வரும் பெரியார் தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியில் சேர்ந்து 38 ஆண்டுகள் பணியாற்றி, பணி நிறைவு பெற்ற இயக்கப் பற்றாளரும், விடுதலைபுரம் தங்கவேலனார் மகளுமான த.தமிழரசி அவர் களை சிறப்பிக்கும் வண்ணம் தொடக்கப்பள்ளியின் தாளாளர் ஞா.ஆரோக்கியராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சிக்கு மே.27 ஆம் தேதி பிற்பகல் 12 மணி அளவில் பெரியார் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
முன்னதாக வளாகத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழாவினை தாளாளர் ஞா.ஆரோக்கியராஜ் அனைவரையும் வரவேற்று தொடங்கி வைத்தார். பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, பெரியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா, நாகம்மை ஆசிரி யர் பயிற்சிப் பள்ளி முதல்வர் செண்பகவள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.விஜயலெட்சுமி, பெரியார் மணியம்மை மருத்துவமனை மருத்துவர் மஞ்சுளாவாணி, பெரியார் மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் அருண் பிரசாத், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் விஜயலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் மல்லிகா, சரஸ்வதி, அருட் பெருஞ்செல்வி ஆகியோர் த.தமிழரசிக்கு நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பு செய்தனர். மதியம் அனை வருக்கும் புலால் உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நிறைவாக தொடக்கப்பள்ளி தலைமையாசி ரியை விஜயலட்சுமி கலந்து கொண்ட அனை வருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment