முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று! மானமிகு சுய மரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் திராவிடர் இயக்க வழியில் வந்து சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்றிய பட்டியல் உண்டு.
ஆட்சி அமைப்பு என்ற முறையில் அவர் சாதித்தவை சரித்திரச் சிறப்பு மிக்கவை. இன்றைக்கு மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிகளைப் பார்க்கும்பொழுது ஒரு மாநில முதல் அமைச்சராக இருந்த நிலையில், இதற்குமேல் இன்னொருவரால் சாதிக்க முடியுமா என்று வினா எழுப்பும் அளவுக்கு அவரது சாதனைகள் அசாதாரணமானவையாகும்.
இதோ சில எடுத்துக்காட்டுகள்.
சமத்துவ சமுதாயம் காணும் நோக்கில் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு ஜாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
அனைத்துச் ஜாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறை; 95 சமத்துவபுரங்களில் இதுவரை 65 சமத்துவபுரங்கள் திறப்பு: 30 சமத்துவபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு; அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.
சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான 179 கோடி ரூபாய் செலவில் “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்“ 15.9.2010இல் திறப்பு.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைத்திட 910 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, புதிய சட்டமன்ற - தலைமைச்செயலக வளாகம் திறந்து சாதனை.
100 கோடி ரூபாய் செலவில் அடையாறு தொல்காப்பியப் பூங்கா.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய்ச் செலவில் உலகத் தரத்திலான “செம்மொழிப் பூங்கா“ 24.11.2010இல் திறப்பு.
சென்னை மாநகர் குடிநீர்ப் பற்றாக்குறையை முற்றிலும் தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் “கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்“ நிறைவேற்றப்பட்டு, 31.7.2010இல் திறப்பு.
மத சுதந்திரம் பேண - “கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து.”
"மூன்றாவது காவல் ஆணையம்" மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப் பட்டு, அது வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந் துரைகள் நடைமுறை.
2 இலட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணி யாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்.
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங் கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதன்காரணமாக, 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக அனுமதிக்கப் பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் உட்பட அனைத்துத் திருமண உதவித் திட்டங்களில் நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு; 4 இலட்சத்து 67 ஆயிரத்து 419 ஏழை பெண்களுக்கு 882 கோடியே 6 இலட்சம் ரூபாய் நிதியுதவி.
50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை.
இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் உண்டு. எடுத்துக் காட்டுக்கு சிலவையே. ஆட்சித் துறையிலும் அவருடைய சாதனை முத்திரைகள் அளப்பரியன.
இவை எல்லாம் மகத்தான சாதனைகள் அல்லவா? இவை என்றென்றைக்கும் கலைஞரைப் பற்றிப பேச வைக்கும்!
வாழ்க மானமிகு கலைஞர்!
No comments:
Post a Comment