செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 28, 2020

செய்தித் துளிகள்....

* சாத்தான்குளம் விவகாரம்! சி.பி.அய். விசாரணை கோரி தி.மு.க. வழக்கு- தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.


* தமிழ்நாட்டில் அதிவேக இணைய இணைப்பு வழங்கும் பாரத் நெட் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.


* கரோனா மரணத்தைத் தாமதமாகத் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனைகள்மீது நடவடிக்கை - அரசு அறிவிப்பு.


* விண்வெளி ஆய்வில் ஈடுபட மாநில அரசுகளுக்கு அனுமதி.


* இணைய வழி கல்வி குறித்து, முக்கிய முடிவு முதலமைச்சரைக் கலந்து ஆலோசித்து இரு நாள்களில் அறிவிக்கப்படும் என்றார் தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.


* சாத்தான்குளம் போலீசார் தாக்கியதால் 10 நாள்களுக்குமுன் மேலும் ஒருவர் மரணமாம்.


* பெட்ரோல் விலையைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.


* கரோனா  மருந்துகள் விளம்பரம் செய்த ராம்தேவ் உள்பட 5 பேர்மீது வழக்கு.


* ஆந்திரா - கர்நூல் மாவட்டத்தில் ஆலையில் விஷ வாயு கசிவு காரணமாக ஒருவர் உயிர் இழப்பு - மூவர் கவலைக்கிடம். (ஏற்கெனவே மே 7 இல் ஆந்திராவில் விஷ வாயு கசிவால் 15 பேர் உயிரிழப்பு!)


* இணைய தளப் படங்களால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி!


* ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - குடியரசுத் தலைவர் அவசரச் சட்டம் பிறப்பித்தார்.


No comments:

Post a Comment