உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மதுரை, ஜூன் 29- சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென் னிக்ஸ் ஆகியோர் கடந்த 19ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடை களை திறந்து வைத்தாக காவல்துறையினர் விசார ணைக்கு அழைத்துச் சென்ற னர். விசாரணையின்போது இருவரும் கடுமையாக தாக் கப்பட்டுள்ளனர். பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 20ஆம் தேதி காலையில் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
ஆனால், 22ஆம் தேதி இரவு பென்னிக்சும், 23ஆம் தேதி அதிகாலை ஜெயராஜும் கோவில்பட்டி அரசு மருத்து வமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இருவரின் உடல்களிலும் ரத்தக்காயங் கள் இருந்தன. காவல்துறையினர் அடித்துக்கொன்றதாக குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத் திய இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசா ரணை நடத்தி வருகிறது. நீதி மன்றத்தின் அனுமதி பெற்று இந்த வழக்கை சிபிஅய் வசம் ஒப்படைக்க முடிவு செய்திருப் பதாக முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி கூறினார்.
இந்நிலையில், தந்தை மகன் மரண வழக்கை சிபி அய்க்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘சிபிஅய் விசாரணை என்பது அரசின் கொள்கை முடிவு, சிபிஅய்க்கு மாற்ற வேண்டும் என்றால் மாற்றுங்கள். இதற்கு நீதிமன்ற அனுமதி தேவை இல்லை’ என்றனர்.
No comments:
Post a Comment