கரோனா தனிமையை விரட்ட வழிகாட்டும் இரட்டையர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 5, 2020

கரோனா தனிமையை விரட்ட வழிகாட்டும் இரட்டையர்கள்

சென்னை, ஜூன் 5-  நம் வீட்டுக் குழந்தைகள், மாணவ, மாணவி கள் இந்த கரோனா தனிமையினால் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு சரியானதொரு வழிகாட்டலை ஏற்படுத்தவும் காரைக்காலை சேர்ந்த இரட்டை யர்களான  விசாகன் மற்றும் அரிணி ஆகிய இருவரும் தங்களது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்நிலையில் தங் களைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற மாணவ மாணவிகளுக்காக நாங்கள் கற்ற சிலம்ப பயிற்சியை வீடியோ மூலமாக வழங்கியிருக்கிறோம். இந்த பயிற்சியை ஏராள மான மாணாக்கர்கள் செய்து மகிழ்ச்சி அடைந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாகவும் பின்னூட்டங்கள் மூலமாக தெரிவித்திருக்கிறார்கள் என்றனர்.


 மின்சார வாகனங்களுக்கு சிறப்பு காப்பீட்டு சலுகைகள்


சென்னை, ஜூன் 5-  க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் துணை அங்கமான ஆம்பியர் எலக்ட்ரிக் வாகனங்கள் தனது 12ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறது.


இதையொட்டி ஸ்மார்ட் மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடிச் சலுகை மற்றும் இதர வியக்கத்தக்க பலன்களையும் அளிக்கிறது.  மேலும், உயர்ரக மாடல்களில் 5 ஆண்டுகள் வரையில் நீட்டிக்கப்பட்ட வாரண்டி சேவையும், இதர பிரிவு களுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலும் பெறலாம். வாடிக்கையாளர்கள் ஏற்கத்தக்க விலையில் இருப்பதுடன், சிறப்பு விலையில் 1+5 ஆண்டுகள் என்ற நிலையில் வாகன காப் பீட்டையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவ பொருட்கள் வழங்கல்


சென்னை, ஜூன் 5- உலக சரக்கு போக்குவரத்து நிறுவனமான பெடக்ஸ் எக்ஸ்பிரஸ், மத்திய கிழக்கு, இந்திய துணைக்கண்டம் மற்றும் ஆப்ரிக்கா (மெய்ஸா) பிராந்தியம் முழுவதும் உள்ள உள்ளூர் சமூகங்களில், கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்து முன்களத்தில் நின்று பணியாற்றும் முதல்நிலை மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மாஸ்க் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) உள்ளிட்ட முக்கிய மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்க உறுதி பூண்டுள்ளது என இந்நிறுவன பிராந்திய தலைவர் ஜாக் முஹ்ஸ் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment