‘‘சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குளத்தில் ஒரு கனவானைச் சந்தித்தேன். அவரைப்பற்றி அவரையே விசாரித்தபோது அவர் பெரிய தனவந்தர், பல உயர்ந்த பதவிகளில் இருக் கிறவர். கல்வி கேள்விகளில் திறமை வாய்ந்தவர். பெரிய மனிதர்க்கு வேண்டிய யோக்கியதைகள் பூராவும் இருந்தன. எனினும், இவற் றையெல்லாம் கூறியதால் மட்டும் தன்னுடைய உயர் வான நிலைமையைச் சொல்லி விட்டதாக அவர் மனதுக்குச் சமாதான மில்லை. ஆதலால், எல்லாம் சொல்லியான பிறகு, அப் பக்கத்தில் மிகவும் செல் வந்தரான நம்பூதிரிப் பார்ப் பானுடைய பெயரைச் சொல்லி அவரைத் தெரி யுமா என்று கேட்டார். நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
‘‘ஹ! ஹா!! இப்பக்கங் களில் அவரைத் தெரியாத வர் இருக்கவே மாட்டார்கள். அத்திருமேனி குடும்பத்துக் கும், எங்கள் வீட்டுக்கும் பரம்பரையாய் ‘சம்பந்தம் உண்டு' எனச் சொல்லி மகிழ்ந்தார். தன்னுடைய செல்வத்தாலும், படிப்பாலும் மச்சு மாளிகை, காலால் - கையாட்களாலும், உயர்ந்த உத்தியோகத்தாலும், தன் குடும்பத்திற்கு உயர்வு மேம்படவில்லை; ஆனால், ஒரு பார்ப்பான் ..................ல் அப்பªருமை பூர்த்தியாகிற தென்ற எண்ணமும், வழக் கமும் கொண்ட வாழ்க்கை யாகயுள்ள ஹிந்து மதத்தை என்ன செய்வது.''
- கோவை அய்யாமுத்து கட்டுரைகள், நூல் பக்கம் 15
விவேகானந்தர் கேரளா வைப் பைத்தியக்காரர்களின் விடுதி என்று சொன்ன துண்டு. அவர் எந்தப் பொருளில் சொல்லியிருந் தாலும், எவ்வளவு மோசமாக நம்பூதிரிகளின் காமக்களி யாட்டம் கூத்தாடியது என்பது விளங்கும்.
நம்பூதிரி குடும்பத்தில் மூத்த மகன்தான் திருமணம் செய்துகொள்வான். மற்றவர்களுக்கு நாயர் வீட்டுப் பெண்கள்தான் - தன் விருப்பப்படி!
நீதிக்கட்சியின் முக்கிய மூளையான டாக்டர் டி.எம்.நாயர் கிளர்ந்து எழுந்தார்; வெகுண்டு கிளம்பினார் என்றால், இந்தக் கேவல மான நம்பூதிரிகளின், பார்ப் பனர்களின் ஆதிபத்திய - ஆபாச அட்டகாசத்தை எதிர்த்துதான் - கண்டுதான் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்!
- மயிலாடன்
No comments:
Post a Comment