பாசிசத்தைப் பாராட்டிய இந்து மகா சபாவின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 27, 2020

பாசிசத்தைப் பாராட்டிய இந்து மகா சபாவின்


டாக்டர் பி.எஸ்.மூஞ்சே!


நாசிசமும், பாசிசமும் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தன. அதை எதிர்த்து உலக நாடுகள் போரில் ஈடுபட்டன. சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் படை களின் வீரஞ் செறிந்த போர்வீரர்களின் தியாகம் ஹிட்லரின் நாஜிப் படைகளைத் தோற்கடித்தது. அதுவே இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குக் காரணமாக அமைந்தது.


ஆனால், இந்த நாசிசமும், பாசிசமும் இணைந்த கலவையாகத் தான் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபா உள்ளிட்ட பார்ப்பன இந்துத்துவ அமைப்புகளின் சித்தாந்தமும், போக்கும் இருந்துவந்தன. இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களுக்குத் தாங்கள் ஆதரவாக இருப்போம் என்று பல முறை அவர்கள் அறிவித்திருந்தாலும், அவர்களின் உளப்பூர்வ ஆதரவு அச்சுநாடுகள் பக்கமே இருந்துவந்தது.


2008-இல் நடத்தப்பெற்ற மாலேகான் குண்டுவெடிப்போடு தொடர்புடைய போன்சாலா இராணுவப் பள்ளியைப் பற்றி விவரிக்கும் பத்திரிகையாளர் தீரேந்திர ஜா, தன்னுடைய ஷிலீணீபீஷீஷ் கிக்ஷீனீவீமீs நூலில், அதன் வரலாற்றைச் சான்றுகளோடு எடுத்து வைக்கிறார்.


1931-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முதலாம் வட்டமேசை மாநாட்டில் இந்து மகாசபையின் பிரதிநிதியாக பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்ற டாக்டர் பி.எஸ்.மூஞ்சே, அதையொட்டி அய்ரோப்பியப் பயணத்தில் ஈடுபடுகிறார். பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற அவர் அதிக நாள் தங்கியது இத்தாலியில்! அதாவது பாசிஸ்ட் முசோலினியின் ஆட்சியிலிருந்த இத்தாலியில்! அங்கு அவர் அதிகம் பார்க்க விரும்பியதும், முசோலினி நடத்திய இராணுவப் பள்ளிகளையே!


இது குறித்துத் தனது டைரியில் விரிவாக எழுதியிருக்கிறார் மூஞ்சே. ரோம் நகரில் இருந்த இராணுவக் கல்லூரி, உடற்கல்விக்கான மய்ய இராணுவப் பள்ளி, உடற்கல்விக்கான பாசிஸ்ட் அகாடமி, இத்தாலி பாசிச இளைஞர் குழுவான ஒபேரா தேசிய பாலில்லாவின்வின் துணை அமைப்புகளான பாலில்லா, அவன்கார்டிஸ்டி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு, அவற்றின் அமைப்புமுறை, பயிற்சிகள், இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பாசிசக் கருத்துகள்  ஊட்டப்படும் விதம் ஆகியன மூஞ்சேவைப் பெரிதும் கவர்ந்தன.


இந்து இந்தியாவை உருவாக்குவதற்கு, இந்துக்களின் இராணுவ மறுகட்டமைப்பு அவசியம் என்று அவர் கருதினார். 1931 மார்ச் 19 அன்று பாசிஸ்ட் அரசாங்கத்தின் தலைமையகமான வெனிஸ் அரண்மனையில் (Palazzo Venezia) முசோலினியைச் சந்தித்தார் மூஞ்சே. அப்போது அவர் மூஞ்சேயிடம் வியந்து பேசியதும், பாராட்டி மகிழ்ந்ததும் இந்த இராணுவப் பள்ளிகளைத் தான்!


தங்களைப் பற்றியும், தங்களின் அமைப்பைப் பற்றியும், பத்திரிகைகளில் எதிர்மறையான விமர்சனங்களை அவ்வப்போது படித்துவந்தாலும், அப்படி தனக்கு எதிர்கருத்துள்ளவையாக (Objectionable) எதையும் தான் பார்க்கவில்லை என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார் மூஞ்சே!


மேலும், உரிய காலத்தில், தேவையேற்படுமாயின் இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளின் பொது அரங்கிலும், பாசிச அமைப்புகளுக்கும், பாலில்லாவிற்கும் ஆதரவாகக் குரல் எழுப்பத் தான் தயங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்,


அதன் அடிப்படையிலேயே இந்தியா திரும்பியதும் பெரும் நிதி ஆதரவைப் பெற்று, போன்சாலே இராணுவப் பள்ளியைத் தோற்றுவித்தார் மூஞ்சே. அது மூஞ்சேவின் காலத்திற்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்.சின் நேரடியாக ஆதரவுத் தளத்திற்கு வந்து சேர்ந்தது.


No comments:

Post a Comment