பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணி யம் இன்று (27.6.2020) காலை சென்னை அண்ணாநகர் அவரது பாரதி குடியி ருப்பு இல்லத்தில் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். சிறிது காலத்திற்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.
திராவிடர் இயக்க உணர்வாளர், எழுத்தாளர் - அந்த வகையில் சிறப்பான பல நூல்களை யாத்தவர். ‘தமிழாலயம்' எனும் மாத இதழை சிறப்பாக நடத்தி யவர்; பெரியார் திடலோடு எப்பொழுதும் நெருக்கமாக இருந் தவர் - நம்மிடம் அன்பு மேவும் மனத்தினர் - அடக்கத்தின் உறைவிடம் - பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர், பேராசிரியரின் மறைவு - பெரும் இழப்பு - வேதனைக்குரியது.
அவர் பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்தினர், அபிமானிகள், நண்பர்கள் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை
27.6.2020
தொடர்புக்கு தொலைபேசி எண்: 044-26161662
No comments:
Post a Comment