பூமியைக் கடக்கும் விண்கோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 6, 2020

பூமியைக் கடக்கும் விண்கோள்


வாசிங்டன், ஜூன் 6  இன்று (6.6.2020) பூமியிலிருந்து 30 மைல் துரத்தில் பூமியைக் கடக்க இருக்கும், விண்கல் ஒன்றின் அளவு அமெரிக் காவில் உள்ள எம்பரர்  கட் டடத்தின் உயரத்தையுடைய தாகும்.


இது போன்ற மிகவும் நெருங்கிய தூரத்தில் இந்த ஆண்டு மூன்று விண்கற்கள் பூமியைக் கடக்கும்.  இந்த விண்கல் பூமியை நெருங்கும் போது பூமியின் சுழற்சி விசை காரணமாக இது மீண்டும் விண்வெளியில் தூக்கிவீசப்படும்.


 இந்த விண்கல் ஒருவேளை பூமியின் மீது மோதும் சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவை ஒத்த ஒரு பெரிய நிலப்பகுதி முழுவதுமே அழிந்து விடும். மேலும் இதன் மூலம் ஏற்படும் தாக்கத்தின் காரணமாக பூமியில் நுண்ணுயிர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் அழிந்து போகும்.


No comments:

Post a Comment