ஒரு நாட்டில் இரு வேறு சித்தாந்தங்கள் ஓர் ஆண்டில் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நெருங்க இருக்கும் நிலையிலும் அதில் ஒரு சித்தாந்தம் நிலைபெற முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் ஒரு மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான்!
ஆம்! ஒரே மதம், ஒரே மொழி, ஒரே சமூகம் மற்றவர்களை ஆண்டான் அடிமை எனும் குடைக்குள் கீழ் மற்றவர்களைக் கொண்டு வரத்துடித்து வடக்கே நாக்பூரில், 1925 ல், கேசவ பலிராம் ஹெட்கேவரால் தொடங்கப்பட்ட இந்து ராஷ்டிர கூடாரமான “ராஷ்ட்ரிய ஸ்வயசேவக் சங்க்” (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பு. அதே நேரத்தில், அனைவருக்கும் அனைத்தும் எனும் ஜாதி , மத, இன, மொழி, வர்க்க பேதமற்ற, ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ வாழ்வியலுக்காகத் தெற்கே ஒற்றை தனி மனிதரின் சுய சிந்தனையால் தொடங்கப்பட்ட “சுயமரியாதை இயக்கம்”. இந்துத்துவ அமைப்பானது தன்னுடைய கிளைக்கழகம் அதிகாரத்திற்கு வரும் போதெல்லாம், தன்னுடைய இந்துராஷ்டிரம் எனும் ஆரிய வலையினை தமிழகத்தில் ஓயாது வீசிக்கொண்டேயிருக்கும் ஆனால், இங்கே வீசப்படும் ஒவ்வொரும் வலையையும் திராவிடம் எனும் வாளால் அறுத்தெரியப்பட்டுக் கொண்டே இருந்துவருகிறது. இந்த பச்சோந்தி எனும் மதவாத பரிவார், முன்னணிகள், சேனைகள், பாரதங்கள், மகாசபைகள் என 80 க்கும் மேற்பட்ட முகமூடிகள் அணிந்து வந்தாலும் தங்கள் கொண்டையை மறைக்க முடியாமல் இவரிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றன.
1925 கேசவ பலராம் ஹெட்கேவர் தொடங்கி, இன்றைய மோகன் பகவத் முதல் பாண்டேக்களும், மாரிதாஸுகளும், ராஜாக்களும், மூன்று சதவீதத்தின் கைக்கூலிகளாக மாறடித்து, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் அடுக்கடுக்கான ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசினாலும், ஒற்றைக்கிழவனின் அந்தக் கைத்தடி அத்தனை நாற்றமெடுக்கும் குப்பைகளையும் உள்ளிழுத்து உயிர் சுவாசக் காற்றாக மாற்றித் தமிழ் நாட்டு மக்களைக் காத்து நிற்கிறது. கொரோனா எனும் கொடிய தொற்று நோயின் காரணமாக ஊரடங்கால் முடங்கிக்கிடக்கும் இந்த கடும் சூழலிலும், இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் பல்வேறு போலிக் கத்திரிப்புகள், சித்தரிப்புகள் படங்கள் வாயிலாகவும், காணொளி வாயிலாகவும், மலை போன்று குவித்த புரளிகளும், வதந்திகளும் அந்த ஈரோட்டுக் கிழவனின் ஒற்றைப் பட பூகம்பப் பெருவெடியால் அத்தனையும் சிதறித் துகள்களாகிப்போகின.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தில் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கியிருக்கும் எனும் தகவலைத் தடுக்க நிறுத்தும் வகையில், “சமூக உணர்வினை” தபால் அட்டை அளவில் வரைந்து இணையத்தின் வாயிலாக புகார் மனுவினை தமிழக முதல்வருக்கும், தேசிய வனவிலங்கு உயிரினங்கள் வாரிய உறுப்பினருக்கும் அனுப்பிடும் வைகையில் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு சிந்தனைகள் உடையவர்களிடத்தில் அஞ்சல் அட்டை திட்டம் 'ஆவல்' எனும் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கு ஓவியர் ஹாசிப்கானின் சமூக உணர்வுக்கான சிந்தனையாளராக முன் நின்ற தந்தை பெரியாரின் ஓவியம் தான் இன்று சமூக வலைதளங்களில் (பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்) பக்கங்களிலும் முகப்பாகவும், வெளிப்பாடாகவும் பகிரப்பட்டு வருகிறது.
என்னுடைய எழுத்துக்களும், பேச்சுக்களும் என் கொள்கையினை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் அதற்கான விளம்பரங்களை எனது எதிரிகளே செய்வார்கள் என்று பெரியார் அன்று சொன்னது இன்றும் உண்மையாகிப்போகிறது.
- சோ.சுரேஷ்
No comments:
Post a Comment