செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 7, 2020

செய்தித் துளிகள்....

* சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளுக்கு கரோனா தொற்று - நீதிமன்றம் மூடப்பட்டது.


* வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை தமிழகம் அழைத்துவரும் வகையில் தமிழ்நாடு விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தமிழ்நாடு அரசின் அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்.


* சென்னை தண்டையார் பேட்டை இளைஞர் ஒருவர் கரோனாவிலிருந்து குணம் பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் கரோனா தொற்று - அதிர்ச்சி!


* ஊரடங்கு முடியும் வரை தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 50 விழுக்காடு பணியாளர்களுக்குப் பதிலாக 33 விழுக்காடு மட்டும் பணியாற்ற வகை செய்யுமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை.


* நாளை முதல் தமிழ்நாட்டில் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்.


* உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்து திரிந்து கடைசியில் உயிரை விட்டார் ஒரு கர்ப்பிணிப் பெண்.


* கல்விக்காக சேர்த்து வைத்த பணத்தைக் கொடுத்து ஏழைகளுக்கு உதவிய  மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசு ஏற்கும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு.


* சென்னையில் 17,433 படுக்கைகள் தயார்! என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு.


* தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரை கட்டணமாம்  - அரசு அறிவிப்பு.


No comments:

Post a Comment