டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- இந்தியாவில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டுகிறது.
- கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாயிட் காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவில் 140 நகரங்களில் ஆர்ப்பாட்டமும், சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் தங்கியுள்ள வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகமானதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப், அவரது குடும்பத்தினர், வெள்ளை மாளிகையில் பதுங்குக் குழியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனை எனக் கூறப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைப் பணியில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, மருத்துவ வசதிகள் முறையாகத் செய்து தரப்படவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என செவிலியர்கள் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:
- செம்மொழித் தமிழ் உயராய்வு மய்யத்திற்கு நாமக் கல்லைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் முனைவர் சந்திரசேகரன் இயக்குனராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு:
- இந்தியாவின் முழு அடைப்பு, வசதியானவர்களுக்கு மகிழ்ச்சியும், ஏழைகளுக்கும் துயரமும் கொண்டதாக அமைந்துள்ளது என கட்டுரையாளர் ருசிர் சர்மா எழுதி யுள்ளார்.
- குடந்தை கருணா,
2.6.2020
No comments:
Post a Comment