கவிப்பேரரசு வைரமுத்துவின் காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 27, 2020

கவிப்பேரரசு வைரமுத்துவின் காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை


அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து பாடல் ஒன்றை எழுதியுள்ளார். ’பெரியார் குத்து’பாடலுக்கு இசையமைத்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். ஜூன் 10 அன்று யூ டியூப் தளத்தில் வெளியிடப்பட்ட இப் பாடல் (youtu.be/TIUkCI9F1CE)  10 நாட்களுக்குள் 5 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.


 


காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை - என்னால்


மூச்சுவிட முடியவில்லை


என் காற்றின் கழுத்தில் - யார்


கால்வைத்து அழுத்துவது?


என் சுவாசக் குழாயில் - யார்


சுவர் ஒன்றை எழுப்புவது?


காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை - என்னால்


மூச்சுவிட முடியவில்லை


 


எத்தனை காலம் எங்கள் விலங்குகள் இறுகும்?


எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்?


ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா?


தோலைப் பார்த்துக் காற்று வீசுமா?


காக்கையும் உயிரினம்


கருமையும் ஒரு நிறம்


எல்லா மனிதரும் ஒரே தரம்


எண்ணிப்பாரு ஒரு தரம்


 


மாளிகை நிறத்தை மாற்றுங்கள் - ஒரு


பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்


நீங்கள் பகல் நாங்கள் இரவு


இரண்டும் இல்லையேல் காலமே இல்லை


காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை - என்னால்


மூச்சுவிட முடியவில்லை!


- கவிப்பேரரசு வைரமுத்து


No comments:

Post a Comment