குமரிமுனையில் தமிழினத்திற்கோர் அடையாளம் அமைத்த கலைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 3, 2020

குமரிமுனையில் தமிழினத்திற்கோர் அடையாளம் அமைத்த கலைஞர்


உலகின் பல கண்டங்களில் கடலடி முடிவுகளில் (முனை) முக்கியமானது தென் பகுதி கண்டங்களில் உள்ள கொம்பு முனை(சிலி) கொம்பல் முனை (நியூசிலாந்து) நம்பிக்கை முனை(தென் ஆப்பிரிக்கா) குமரி முனை (இந்தியா) இந்த அனைத்து முனை களிலும் நியுசிலாந்தைத் தவிர மற்ற நாடுகளில் பாரம்பரிய மிக்க மனித இனம் வாழ்ந்துவந்திருக்கிறது, ஆனால் அதற்கு அடையாளம் என்று ஒன்றுமே இல்லை. எதிர்காலத்தில் அந்த இனத்தின் பிள்ளை களுக்கு அடையாளம் காட்ட சின்னங்கள் இல்லாத நிலையில் குமரிமுனையில் தமிழினத்திற்கு என்று அடையாளம் காட்ட வான்புகழ் கொண்ட வள்ளுவ னுக்கு சிலை வைத்து பெருமைப்படுத்தி இனி எக்காலத்திலும் தமிழர்களுக்கு என்று ஒரு அடை யாளத்தை உலகிற்கே தந்து சென்றார் கலைஞர்.   கலைஞர் இதைச்செய்யத்தவறி இருந்தால் மதவாத ஆட்சியாளர்கள் அங்கு கையில் வில்லுடன் நிற்கும் பிரமாண்ட சிலை ஒன்றை வைத்து ஆரிய அடை யாளத்தை பதித்து வைத்திருப்பார்கள்.


No comments:

Post a Comment