போபால், ஜூன் 8 பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிகிச்சைக்கு பணம் செலுத்தாத காரணத்தால், முதியவரைக் கட்டிப்போட்ட மருத்துவ மனைகுறித்து தகவல் வெளி யாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு உடல்நலக் குறைவுஏற்பட்டது. இதை யடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்ததில் குணமடைந்துள்ளார். மருத்துவமனையில் ஏற்கெ னவே ரூ.5 ஆயிரம் செலுத்தி யுள்ள நிலையில் மேலும் ரூ.11 ஆயிரம் செலுத்தவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவரது குடும்பத் தினரால் அந்தத் தொகையைச் செலுத்த முடியவில்லை. இதை யடுத்து, வீட்டுக்கு அனுப்ப மறுத்த மருத்துவமனை நிர் வாகம் அவரை கட்டிலுடன் சேர்த்து கட்டி வைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளி யானது.
இதுகுறித்து முதியவரின் மகள் கூறும்போது, “எங்கள் தந்தை தனியார் மருத்துவ மனையில் நான்கு நாட்களாக தங்கி சிகிச்சை எடுத்தார். சிகிச்சை முடிந்த நிலையில் அவர்கள் கேட்ட பணத்தை செலுத்த முடியவில்லை. அதற் காக எங்கள் தந்தையை கட் டிலுடன் கட்டி வைத்துள்ள னர்'' என்றார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது, "முதியவர் தன் னைத் தானே காயப்படுத்திக் கொள்ளாதிருக்க கட்டிப் போட்டுள்ளோம். மனிதாபி மான அடிப்படையில் அவரது சிகிச்சைக்கான அனைத்து கட்டணத்தையும் ரத்து செய் துள்ளோம்'' என்றனர்.
இந்த தகவலை அறிந்த மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவமனை நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment