ஏட்டுத் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 5, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • தெலங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழிக் கல்விக்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி நிர்வாக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 4000 பள்ளிகளில் சுமார் 12 லட்சம் ஏழை மாணவர்கள் எந்தவித இணைய வசதியின்றி வாழும் நிலையில், இணைய வழிக் கல்வி ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளனர்.

  • வரும் ஜூன் 20 முதல் உஸ்மானியப் பல்கலைக்கழகம் நடத்த இருந்த தேர்வுகள் பெற்றோர்கள், மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • கேரள மாநிலம் மல்லபுரம் பகுதியில் யானை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் முயற்சித்த மதரீதியான பேச்சுகள், கேரளத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தோல்வியில் முடிந்தது. மேனகா காந்தி, எம்.பி. யின் பேச்சு கேரள மாநிலத்திற்கு எதிரானது என அம்மாநில முதல்வர் பினாராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

  • அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கை, நோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி விட்டது என தொழில் அதிபர் ராகுல் பஜாஜ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான உரையாடலில் தெரிவித்தார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • கரோனா தொற்று ஜூலை மாத மத்தியில் 1.5லட்சமாக அதிகரிக்கும் என எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்கள் அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

  • மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுக்குப் பதிலாக நேரடியாகப் பணம் வழங்க வேண்டும் என சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பில் 50விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு.


டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு:



  • அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கியுள்ள வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை சுற்றிலும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு அரணாக மாற்றப்பட்டுள்ளது. நாஜி தந்திரம் மூலம் மக்களைப் பிளவுபடுத்த டிரம்ப் முயற்சிக்கிறார் என ராணுவ முன்னாள் செயலாளர் ஜேம்ஸ் மாட்டீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


- குடந்தை கருணா,


5.6.2020


No comments:

Post a Comment