பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை பெரியசாமி படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 28, 2020

பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை பெரியசாமி படத்திறப்பு


சென்னை, ஜூன் 27- சென்னை பெரம்பூர் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தஞ்சாவூர் ஒன் றியம் புதுமாத்தூர் பெரியார் பெருந் தொண்டர் வி.பெரியசாமி(88) அவர்கள் 1.6.2020 அன்று சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்தார்.


 அவரது படத்திறப்பு நிகழ்ச்சி 17.6.20 அன்று 12மணி அளவில்  சென்னை அண்ணாநகர் இல்லத்தில் நடைபெற்றது. 


பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் வி.பெரியசாமி அவர்களின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். பெ. திராவிட செல்வன் அறிமுக உரை யாற்றினார். 


தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, எ.அய்.ஆர்.எப்.  ரயில்வே சங்க பொறுப் பாளர்கள் தாடி மனோகரன், மோகன்தாஸ் ஆகியோர் அவருடைய தொண்டினை நினைவுகூர்ந்து உரையாற்றினர். பெ.அன் பழகன் நன்றி கூறினார்.


தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், ரயில்வே தொழிலாளர்களும் குடும்ப உறவினர்களும் கலந்து கொண்டனர். தனி மனித இடை வெளியுடன் கரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளுடன் நிகழ்வு எளிமையாக நடைபெற்றது.


 


No comments:

Post a Comment