*கலி.பூங்குன்றன்
ஊர் அடங்கினாலும், எந்த வைரஸ் மிரட்டினாலும், தந்தை பெரியார் சிந்தனைகளுக்கும் - பரவலுக்கும் மட்டும் முடக்கமில்லை என்ற முறையில் காணொலி மூலம் கழகத் தோழர்கள் கருத்துகளைப் பரப்பும் பணியில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்கள்.
கழகத் தலைவர் அவர்களும் பொறுப்பாளர்களின் வேண்டுகோளை இன்முகத்துடன் ஏற்று கருத்துரைகளை வழங்கிய வண்ணமாகவே உள்ளார்.
மாணவர்கள் பழகு முகாம் குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இத்திட்டம் 22 முதல் 26 முடிய அய்ந்து நாட்கள் அருமையாக நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கருத்தரங்கத்தின் நிறைவுரையை நேற்று மாலை வழங்கினார்.
தந்தை பெரியார் பிரச்சாரம் எந்த அளவுக்கு வென்று இருக்கிறது என்றால், இந்திய அரசமைப்புச் சட்டமே அதனை ஏற்கும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம் அடிப்படைக் கடமை என்று எதைக் கூறுகிறது? 51ஏ என்ற பிரிவு அதனைத் தெளிவுபடுத்துகிறது. அதில் எச் என்ற உட்பிரிவு மிகவும் முக்கியமானது.
இதுகுறித்து தனது உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டு விளக்கம் அளித்தார் திராவிடர் கழகத் தலைவர்.
இந்திய மக்களின் அடிப்படைக் கடமையைக் குறித்து அந்தப் பகுதி குறிப்பிடுகிறது.
It shall be the Duty of every citizen of India to Develop the scientific temper , humanism, the spirit of inqiry and reform.
அறிவியல் உணர்வு மனித நேயம், எதையும் கேள்வி கேட்கும் உணர்வு (அறிவு தேடல்) சீர்திருத்த பாங்கு இவற்றைக் குடிமக்களிடம் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறதே - இந்த அடிப்படைக் கடமையை உண்மையிலேயே செய்வது யார்? திராவிடர் கழகம் தானே, பகுத்தறிவாளர் கழகம்தானே - பெரியார் சிந்தனை யாளர்கள்தானே எண்ணிக்கையில் நாம் குறைந்தவர்களாக இருக்கலாம், ஆனால், பணிகளோ அளவிறந்தன. நோபல் அறிஞர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்.
அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கோட்பாட்டை அன்றாடம் செயல்படுத்தும் நமக்கு நியாயமாக மாநில, மத்திய அரசுகள் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டாமா? (பிரச்சாரத்தை தடுக்காமல் இருந்தால் போதாதா என்ற கேள்வியும் எழுகிறது)
நமது பிள்ளைகள், குழந்தைகள், மாணவர்கள் கேள்வி கேட்டு உண்மைகளை அறிந்து கொள்வதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இங்கே கேள்வி கேட்ட பிள்ளைகள்கூட, Ôகேள்வி கேட்டால் அதிகப் பிரசங்கி என்று வீட்டில் உள்ளவர் திட்டுவதாகÕச் சொன்னார்கள். அது அவர்கள்மீது குற்றமில்லை. அவர்களுக்குத் தெரிந்தால் தானே, தெரியாவிட்டால் ஆத்திரப்பட்டுத் திட்டத்தான் செய்வார்கள்.
அந்தக் கேள்விக்கு அவர்களிடம் விடை கிடைக்கவிட்டால் அதற்கான பதில் தேடலில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்று சொன்ன நமது தலைவர் ஆசிரியர் அவர்கள், விஞ்ஞானி அய்சக் நியூட்டனை மிகப் பொருத்தமாக இணைத்தார். தோட்டத்தில் அந்த சிறுவன் உட்கார்ந்திருந்தபோது ஆப்பிள் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுகிறது.
மரத்திலிருந்து ஆப்பிள் விழுவது வழமைதானே என்று கடந்து செல்லவில்லை அவன். ஏன் அது கீழே விழ வேண்டும் - ஏன் மேலே செல்லக் கூடாதா? என்ற கேள்வியைத் தனக்குள்ளே எழுப்பினான். அப்பொழுது அவனுக்கு வயது 12 என்பது நினைவில் இருக்கட்டும் (இந்த வயதில் உள்ளவர்கள் இந்தக் காணொலியில் கலந்து கொண்டனர்).
ஆம். அந்தக் கேள்விதான் நியூட்டனை விஞ்ஞான உலகில் மிக முக்கியமான இடத்தில் நிறுத்திப் பார்க்க வைத்தது. சென்டர் ஆஃப் கிராவிட்டி என்ற புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடிப்பதற்குக் காரணமாக அமைந்தது. அந்தப் புவி ஈர்ப்பு விசைதான் பல விஞ்ஞான சாதனைகளை, சாதனங்களை உருவாக்குவதற்கு மய்யப் புள்ளியாகவும் அமைந்தது.
ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியில் மனித உரிமைகள் வெடித்துக் கிளம்புகின்றன. மனித உரிமை களும், புதிய சிந்தனைகளும் பிறக்கின்றன. இப்பொழுது அமெரிக்காவில் நிறவெறியை எதிர்த்து மனித உரிமைப் போராட்டம் வெடித்துக் கிளம்ப இந்த உணர்வின் அடிப்படையில் தான்.
இங்கு மட்டும் என்ன வாழ்கிறது? இங்கும் பிறவியின் அடிப்படையில் பிராமணன் - சூத்திரன் என்ற பேதம்தானே!
மனுதர்மமும், கீதையும் பிறப்பால் பேதத்தை நிலை நாட்டவில்லையா? சூத்திரன் என்றால் தொழிலாளி, வேசி மகன் என்று பறைசாற்றவில்லையா?
சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணன் வேலை வாங்கலாம். பிராமணனுக்குத் தொண்டு செய் யவே சூத்திரனைப் பிர்மா படைத் தார் (மனுதர்மம் அத்தியாயம் 8 - சுலோகம் 413).
சூத்திரன் படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க வேண் டும், படித்ததைக் காதால் கேட்டால், ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று சொல்லவில்லையா?
இந்தப் பிறவிக் கொடுமையை இழிவை உரிமை மறுப்பை தலை கீழாக மாற்றியமைப்பதுதான் நம் இயக்கம் - இதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்தான் தந்தை பெரியார்.
இந்தப்பணியைச் செய்யும் போது, கடவுள், மதம், வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், சாத் திரங்கள் குறுக்கே வருகின்றன - அதனால் அவற்றையும் எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று மாணவர்களுக்கு விளக்கப் பாடம் நடத்தினார். அவர் ஆசிரியர் அல்லவா!
தந்தை பெரியார் கூறிய ஒரு தகவலை அவர் சொன்னபோது பிள்ளைகள் பெரிதும் இரசித்தனர்.
தந்தை பெரியாரிடம் ஒரு தோழர் ஒரு சந்தேகத்தைக் கேட்டார், Ôஅய்யா நாம் கடவுள் இல்லை என்றே சொல்லுகிறோம். ஒருக்கால் கடவுள் நேராகவே வந்து விட்டால் என்ன செய்வது?Õ என்பதுதான் அந்தத் தோழரின் கேள்வி.
தந்தை பெரியார் சற்றும் நேரங்கடத்தாமல் உடனடியாக, Ôவந்தால் கடவுள் இருக்கிறார்? என்று சொல்லி விட்டுப் போவோம் - அவ்வளவுதான்Õ என்றாரே பார்க்கலாம்.
கடவுள் மறுப்பாளரான நமது கொள்கை என்ன? கடவுளை மற - மனிதனை நினை; சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பதுதான்.
உண்மையையே பேச வேண்டும்; அதே நேரத்தில் அது கடுமையான ஒன்றே!. பொய்யைச் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் . உண்மையைச் சொன்னால் சில கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை, ஒருவர் தவறு செய்தால் அந்தத் தவறை நான் செய்தது உண்மைதான் என்று ஒப்புக் கொள்வாரேயானால், அதற்குமேல் ஒன்றும் பேச மாட்டார்.
பொய் சொன்னால்தான் அவருக்குக் கோபம் வரும். தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை உணமையையே வாழ்நாள் முழுவதும் பேசினார். அதனால்தான் கடும் எதிர்ப்புகளையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது.
தனது தந்தையாருக்காக அவரின் கையொப்பத்தை வழக்கமான வியாபார முறையில் அவர் போட்டது - மோசடியானது - போர்ஜரி என்ற வழக்குத் தொடுக்கப் பட்டபோது கூட, (நான் போடவில்லை - என்று சொன்னால், தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம் என்று வழக்குரைஞர் சொன்ன பொழுதுகூட, பெரியாரின் தந்தையார் எவ்வளவோ கேட்டுக் கொண்டபோதும்கூட அவற்றை ஏற்காமல்) நீதிமன்றத்தில் Ôஎன் தந்தையாரின் கையொப்பத்தை நான் போட்டது உண்மைதான்!' என்றுதான் சொன்னாரே தவிர பொய் சொல்லவில்லை.
அந்தக் கையெழுத்தால் யாரையும் மோசம் செய்யவில்லை, உண்மையைப் பேசியிருக்கிறார் என்று சொல்லி, தந்தை பெரியாரை ஆங்கிலேய நீதிபதி விடுவித்தார் என்பது வரலாறு.
கடவுள் மறுப்பாளர்கள் எத்தகைய ஒழுக்கத்தை, உண்மையைப் பேண வேண்டும் என்பதற்கு - தந்தை பெரியார் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை மாணவர்களுக்கு எடுத்துக் கூறியது தனி சிறப்பாகும். அவர்களது நெஞ்சில் விதைத்த ஒழுகலாறு விதையாகும்.
பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை; ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் தனக்கும், வீட்டுக்கும் சமுதாயத்துக்கும் பாதிப்புதானே!
மற்றவர்களை ஏமாற்றக் கூடாது, வஞ்சிக்கக் கூடாது - தந்தை பெரியார் திறந்த புத்தகமாகவே வாழ்ந்து காட்டியவர். நம் இயக்க ஏடுகளை படியுங்கள். புரட்சிக் கவிஞர் கூறியதுபோல, Õஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு வையத்தை!' என்றாரே அதனைத் துணையாகக் கொள்ளுங்கள்.
விஞ்ஞான மனப்பான்மைதான் உங்களை வளர்க்கும் உங்களை விஞ்ஞானிகளாகவும் உயர்த்தும்.
மூடநம்பிக்கைக்கு எந்த காரணத்தை முன்னிட்டும் ஆளாகாதீர்கள் தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் மூடநம்பிக்கை விலகி ஓடும்.
இது கரோனா காலம் அதற்காகக் கலங்காதீர்கள். மனித அறிவு இதனை வெற்றி கொள்ளும். கவலைப்படுவதோ, எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வதோ பிரச்சினைக்குத் தீர்வாகாது.
எதையும் துணிவோடு எதிர்கொள்ள வேண்டும்; கரோனா என்ற சொல்லும் பொழுது, விஞ்ஞான மருத்துவ ரீதியாக நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.
முகக்கவசம் முதன்மையானது - கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது, தனி மனித இடைவெளி இவை எல்லாம் அவசியம். சத்தான உணவும் முக்கியம் - பொருளாதாரப் பிரச்சினைகள் இந்தக் கால கட்டத்தில் எதிர்கொள்ள நேரிடும். அதை உரிய வழிமுறையில் கூட்டு மனப்பான்மையோடு சமாளிக்க வேண்டும்.
இவற்றை நாம் யாருக்காகவோ செய்யவில்லை. நமக்காகத்தான் - நம்மைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் என்பதை நினைவில் வையுங்கள்.
எடுத்துக்காட்டாக, சாலையில் வாகனத்தில் நாம் பயணம் செய்கிறோம். போகிற வழியில் சிக்னல் கம்பம் இருக்கிறது - பச்சை, மஞ்சள், சிகப்பு என்ற மூன்று வண்ணங்கள் நமக்கு வழிகாட்டக் கூடியவை பச்சை என்றால் போகலாம், சிகப்பு என்றால் போகக் கூடாது. இல்லை, என் வண்டி போனால் என்ன? என்று மீறிப் பயணித்தால் விபத்துதான். விதிமுறைகளை நமக்கு நாமே நமது பாதுகாப்புக்காகத்தான் ஏற்படுத்தியுள்ளோம் என்பதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் மறந்து விடக் கூடாது - கூடவே கூடாது.
அருமையான ஏற்பாடு பிள்ளைகளோடு பெற்றோர்களும் வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது கழகப் பொறுப்பாளர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் - நன்றி என்றார் சிறந்த வகுப்பினை நடத்திய தமிழர் தலைவர் அவர்கள்.
திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தொடக்கத்தில் வரவேற்புரையாற்றினார்.பொதுச்செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் அறிமுகவுரையாற்றினார். திருச்சி மாவட்ட மகளிர்ப் பாசறை தலைவர் அம்பிகா நன்றி கூறிட இரவு 8 மணிக்கு மாணவர்கள் பழகு முகாம் இனிதே நிறைவுற்றது.
பழகு முகாம் - ஒரு குறிப்பு!
திருச்சி மாவட்டம் சார்பாக நடந்து கொண் டிருக்கும் மாணவர்கள் பழகு முகாம் குறித்த சிறு குறிப்பு:
1) பங்கேற்ற வகுப்பினர் 6ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை.
2) மொத்தப் பதிவு - 108
3) மாவட்டங்களின் பங்கு: திருச்சி 16%, சென்னை 13%, கடலூர் 10%, கிருஷ்ணகிரி 8%, திருவள்ளூர் 7%, கோயம்புத்தூர், செங்க ல்பட்டு 6% திருவண்ணாமலை, சிவகங்கை 5%, ஏனைய 3% கீழ்
4) 5 நாட்கள்! 5 தலைப்புகள்! 22.6.2020: பெற்றோரை மதித்தல் - ஓவியா அன்புமொழி, 23.6.2020: விவாதம் செய்யும் முறை - வழக்கு ரைஞர் பூவை. புலிகேசி, 24.6.2020: எளிய முறையில் சிந்திப்போம்! - சே.மெ.மதிவதனி, 25.6.2020 தன்னம்பிக்கை வளர்ப்போம்! - முனைவர் துரை.சந்திரசேகரன், 26.6.2020: மூட நம்பிக்கையில் இருந்து விலகி வாருங்கள்- கவிஞர் கலி. பூங்குன்றன்
5) அனைத்து வகுப்புகளும் 40 நிமிடங்கள் மட்டுமே நடந் தன. பிறகு மாணவர்களின் கேள்விகள் நேரம். மிகச் சிறந்த, வியக்கத்தக்க கேள்விகளைக் கேட்டனர்.
6) சராசரியாக தினமும் 75 மாணவர்கள் வகுப்பில் பங்கேற் றனர். குறிப்பாக வருகை தந்த மாணவர்களில் 60 விழுக்காடு இயக்கம், கொள்கை சாராதவர்கள்!
7) பங்கேற்ற வகுப்புகள்: வகுப்பு - 6 - 9 = 32%, வகுப்பு 10 - 12 = 18%, கல்லூரி = 31%, தொழிற்கல்வி = 7%
8) பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள்: திருச்சி மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், திருச்சி வி.சி. வில்வம், பெல். ஆண்டிராஜ், அசோக், மாவட்டச் செயலாளர் மோகன்.
கலந்து கொண்டவர்கள்; பெல். ஆறுமுகம், திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் தமிழ் சுடர், அம்பிகா கணேசன், தினமும் தொடக்கவுரை: தஞ்சை இரா. ஜெயக்குமார்.
ஜூன் 26; தமிழர் தலைவர் ஆசிரியர் நிறை வுரையாற்றிய போது பங்கேற்றவர்கள்.
வரவேற்புரை: திருச்சி மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், தொடக்கவுரை: பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார், சிறப்புரை: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரி யர், நன்றி யுரை: திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா கணேசன், ஒருங் கிணைப்பு: வி.சி. வில்சம், பெல் ஆண்டிராஜ், அசோக் தமிழகம் முழுவதுமிருந்து 65 மாண வர்கள் முகாமில் பங்கேற்றனர்.
நிகழ்வில் பங்கேற்றோர்: பேராசிரியர் திருச்சி பேரா. செந் தாமரை, பேரா. இஸ்மாயில், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், தஞ்சை சி. அமர்சிங், தஞ்சை அ. கலைச்செல்வி, தாம்பரம் முத்தையன், குடியாத்தம் தேன்மொழி, அரோக் கோணம் எல்லப்பன் சோமசுந்தரம், பெல்.ஆறுமுகம், ச. பிரின்ஸ் என்னாபெரியார், அரக்கோணம் லோகநாதன், பொன்னேரி பன்னீர்செல்வம், பொறியாளர் இன்பக்கனி, திரு வெறும்பூர் தமிழ்ச்சுடர், தருமபுரி யாழ் திலீபன், கோவை பிரபாகரன், சே.மெ. மதிவ தனி, ஓவியா அன்புமொழி மற்றும் பலர்.
வினாக்களும் - விடைகளும்
மாணவர்கள் பழகு முகாமில் தன் உரையைத் தொடங்குவதற்குமுன் இருபால் மாணவர்களிடமிருந்து கேள்வி களை வரவேற்றார் தமிழர் தலைவர்.
பத்து மாணவர்கள் கேள்வி களைக் கேட்டார்கள்.
கேள்வி: எதிர்த்துக் கேட்டால் கோபப்படுகிறார்களே?
பதில்: அவர்களிடம் பதில் இல்லை - அதனால் கோபப் படுகிறார்கள்.
கேள்வி: மாலை நேரத்தில் விளக்கு ஏற்றினால் நோய் வராதாமே?
பதில்: விளக்கேற்றுங்கள் என்று பிரதமர் கூறினாரே கரோனா ஒழிந்ததா?
கேள்வி: வேத காலம்தான் வரலாற்றுத் தொடக்கம் என்கிறார்களே?
பதில்: தவறான தகவல் - சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமா - ஆரியர் நாகரிகமா! (அய்ராவதம் மகாதேவன் போன்ற பார்ப்பனர்களே அது திராவிடர் நாகரிகம் என்று ஒப்புக் கொண்டு விட்டனர்) அதை ஆரிய நாகரிகம் என்று காட்ட பிஜேபி ஆட்சியில் திராவிடர்களின் காளைச் சின்னத்தை கிராபிக் செய்து குதிரையாக ஆக்கிக் காட்டினார்கள்.
கேள்வி: சூத்திரர்கள் என் றால் சூத்திரம் தெரிந்தவர்கள் என்று பெருமையாகச் சொல்லு கிறார்களோ?
பதில்: அசல் திரிபுவாதம். மனுதர்மம் அத்தியாயம் - 8 சுலோகம் 415 என்ன சொல்லுகிறது? சூத்திரன் ஏழு வகைப்படுவான். அதில், ஒன்று விபச்சாரி மகன் என்பதாகும். பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 9 - சுலோகம் - 32).
கேள்வி: நேர்முகத் தேர்வு களில் ஆங்கிலத்தில்தான் கேட்கிறார்கள் தமிழில் கேட்ப தில்லையே.
பதில்: தமிழை விஞ்ஞான மொழியாக வளர்க்க வேண்டும். பல நாடுகளில் ஆங்கிலம் தெரியாது - ஆனாலும் அவர் களின் மொழிகளை அறிவியல் மொழியாக வளப்படுத்திக் கொண்டு விட்டனர். தமிழும் விஞ் ஞான மொழியாக வேண்டும். தொடர்பு ஆங்கிலத்தையும் கற்பது அவசியம்.
கேள்வி: ஆன்லைனில் பாடம் நடத்துகிறார்கள் - வசதி வாய்ப்பு இல்லாத வீட்டுப் பிள்ளைகளின் நிலை என்ன?
பதில்: கண்டித்துதான் வருகிறோம். சம வாய்ப்பு இல் லாத ஒரு சூழல்-சிலருக்கு வாய்ப்பும், பலருக்கு வாய்ப்பு மறுப்பும் ஏற்படும் இந்த நிலை கண்டிக்கத்தக்கது.
காணொலியில் படித்த ஜாதி, காணொலியில் படிக்க முடியாத ஜாதி என்று ஒரு புதிய ஜாதியை உருவாக்குவது நல்லதல்ல. அரசு இதில் தலையிட வேண்டும்.
கேள்வி: உங்கள் ஞாபக சக்திக்குக் காரணம் என்ன?
பதில்: மாணவர் பருவந் தொட்டு படிப்பதை அவ்வப் பொழுது குறிப்பெடுப்பது அத னைப் பின்னர் விரிவாக்கிக் கொள்வது என்று எழுதிப் பார்க் கும் பயிற்சியைப் பெற்றால் நினைவாற்றல் பெருகும். எதைப் படித்தாலும் அதனை உள் வாங்கிக் கொண்டு படித்தால் நினைவில் நிற்கும்.
கேள்வி: கீழ்ஜாதி, மேல் ஜாதி என்கிறார்களே?
பதில்: ஜாதிக்கு அடையாளம் என்ன? இரத்தப் பிரிவை வைத்து ஜாதியை சொல்ல முடியுமா? குறிப்பிட்ட ஜாதிக்குக் குறிப்பிட்ட இரத்தப் பிரிவு என்று இருக்கிறதா? ஆபத்தான நேரத்தில் இரத்தம் தேவைப்படும்பொழுது ஜாதி யைப் பார்க்கிறார்களா?
கேள்வி: மதம் எப்பொழுது ஒழியும்?
பதில்: மனிதர் பகுத்தறிவுப் பெறும்போது மனிதநேயத்துக்கு எதிரானது மதம்
கேள்வி: திருச்சியில் நடப்பதுபோல மற்ற இடங்களிலும் பழகு முகாம் நடத்தப்படுமா?
பதில்: நடத்தப்படும்.
மாணவர்கள் நிஷா, இரா.அன் புமதி, சேலம் பிரபாகரன், காவியா, தமிழ்ச்செல்வன், காயத்ரி, வெற்றி, கியூபா டார்வினா, யாழினி, கவிநிஷா முதலியோர் வினாக் களைத் தொடுத்தோர் ஆவர்.
No comments:
Post a Comment