டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- கரோனா தொற்று பரவிவரும் நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன வேதனையைத் தரும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேர்வை ரத்து செய்ததுடன், முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கிரேடு வழங்கப்பட்டு, 11ஆம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என தெலங் கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
- மே மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிரதமரின் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டமும், 40 விழுக்காடு இளைஞர்களிடம்தான் சென்றுள்ளது.
- நாட்டில் நாளும் அதிகரித்துவரும் கரோனா தொற்று, பல மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்கான அறை வசதி இல்லை; மருத்துவர்களுக்கே கரோனா தொற்று வந்ததன் காரணமாக, அய்தராபாத் நிஜாம் மருத்துவமனை போன்று சில மருத்துவமனைகள் மூடப்பட்டு வரும் நிலையில், கூட்டத்தை அதிகரிக்கும் வழிபாட்டுத் தலங்களை திறப்பது அரசின் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும் என தலையங்க செய்தி கூறுகிறது.
- அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் ஆர்ப்பாட்டம் உலகம் முழுவதும் எதிரொலிக்குமா? என்ற கேள்வியோடு தனது கட்டுரையை எழுதியுள்ளார் இர்பார் ஹீசைன்.
டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு:
- பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எல்.கே.அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நீதிமன்றம் அழைக்கும் நாளில் தங்களது அறிக் கையை நேரில் தர வேண்டும் என சிறப்பு சி.பி.அய். நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு முன்னர் 2017 மே 26ஆம் தேதியன்று இம்மூவரும் நீதிமன்றத்திற்கு நேரில் வந்திருந்தனர்.
தி இந்து, டில்லி பதிப்பு
- கேரளாவில் கோயிலைத் திறக்கும் அரசின் முடிவுக்கு, விசுவ இந்து பரிசத் போன்ற சங்கி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. கோயிலைத் திறப்பதால், கரோனா தொற்று அதிகரிக் கும் எனவும் அதன் அமைப்பாளர் பாபு கூறியுள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வை ஒத்திவைத்திடக் கோரி திமுக தலைமையிலான கட்சிகள் வரும் 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்துள்ளன.
- அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் நிறவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டம், கரோனா தொற்று தடுப்பில் பின்ன டைவு அனைத்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கான ஆத ரவை குறைத்துள்ளது.
- காணொலி மூலம் பட்டதாரிகளிடம் பேசிய கூகுள் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மாணவர்கள் நம்பிக்கையுடனும் வெளிப்படையாகவும் இருங்கள்; அனைத் தையும் மாற்றும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது என பேசினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- நாட்டின் 24 மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது.
- பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதன் மூலம் ஒன்பது லட்சம் மாணவர்களின் வாழ்வை, கேள்விக்குரியாக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
- நாட்டின் சுகாதாரத்துறையை விரிவுபடுத்திட அரசு அனைத்து முயற்சிகளையும் உடன் செய்திட வேண்டும் என கிறிஸ்டபர் ஜாபர்லெட், உத்சவ் ஷா தங்களது கட்டுரையில் கூறியுள்ளனர்.
- உணவு தானியங்களை மாநிலங்களுக்கு கூடுதலாக வழங் கிட வேண்டும். வரும் மழைக்காலத்தில் ஏழைகள் பட்டினி கிடப்பதில் இருந்து காத்திட மத்திய அரசு துணிந்து முடிவு எடுக்க வேண்டும் என பொருளாதாரப் பேராசிரியர் ஜூன் டிரெட்ஜ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:
- உத்தரபிரதேசத்தில் கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலாயா பள்ளியில் ஆசிரியை அனாமிகா சுக்லா, தனது வேலையை ராஜினாமா செய்ய வந்தபோது கைது செய்யப் பட்டார். ஒரே நேரத்தில் 25 பள்ளிகளிலும் ஆசிரியர் பணி புரிந்ததாகக் கூறி ரூ.1 கோடி சம்பாதித்திருப்பது தெரிய வந்துள்ள நிலையைல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் 25 அவதாரங்கள் எப்படி? என்பது புரியாத புதிர் என தலை யங்கச் செய்தி கூறுகிறது.
- குடந்தை கருணா,
9.6.2020
No comments:
Post a Comment