இரங்கல் தீர்மானம்:
கரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்த பெரி யார் பெருந்தொண்டர்க ளுக்கு, கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து உயிரிழந்த மருத்துவர்களுக்கும், கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த மக்களுக்கும் வீர வணக்கத்தையும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தீர்மானம் எண் 1:
கரோனா பெருந்தொற்றி லிருந்து மாணவர்களைப் பாதுகாக்க மகாராட்டிர அரசு பொதுத்தேர்வை ரத்து செய்தது போல தமிழகத்தி லும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழகத்தில் முதன்முதலாக வணக்கத்துக்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்ததன் அடிப்படையி லும், திமுக உள்ளிட்ட அனைத் துக்கட்சிகளும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்ததன் அடிப் படையிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய் யப்பட்டு உள்ளது. இந்நிலை யில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதன் முதலாக பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளுக் கும், தேர்வை ரத்து செய்த தமிழக அரசுக்கும் இக்கூட் டம் நன்றி தெரிவிக்கிறது.
தீர்மானம் எண் 2:
2020 ஆம் ஆண்டு ஜூன் 1 இல் 86 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடாம் 'விடுதலை'யை தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் கொண்டு சேர்த்திடும் வகையில், லட்சம் பேரிடம் இலட்சிய விடுதலை எனும் முழக்கத்துடன் விடு தலை வாட்ஸ்அப் மூலம் பரப் பப்பட்டு வருகிறது. இதன்படி அரியலூர் மாவட்ட இளை ஞரணி சார்பில் வாட்ஸ்அப் பில் புதிய அலைபரப்பு (ப்ராட் காஸ்ட்) மூலம் நண்பர்கள், உறவினர்களிடம் அதிகள வில் சேர்ப்பதென்றும், பெரு மளவில் விடுதலை பாதுகாப்பு நிதி திரட்டித் தருவது என் றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 3:
அகில இந்திய ஒதுக்கீட் டில் மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு அறவே இடஒதுக்கீடு புறக் கணிக்கப்பட்டு, பூஜ்ஜியம் நிலைக்குத் தள்ளப்பட்டது சமூகநீதிக்கு எதிரானதாகும். இதற்குப் பரிகாரம் தேடும் வகை யில், நீட் தேர்வை முற்றிலும் ஒழித்து பழைய முறையிலேயே மாநிலங்களின் உரிமைகளுக்கு விட வேண்டும் என இக்கூட் டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண் 4:
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கி ணங்க செம்மொழி ஆய்வு நிறுவனத்துக்கு தகுதியுள்ள பேராசிரியர் தாமோதரனை தேர்வு செய்ய வேண்டும் என வும், தகுதியில்லாத ஒருவர் பா.ஜ.க சார்பாளர் என்பதற் காக நியமனம் செய்த தமிழக அரசு உடனடியாக தலை யிட்டு நிறுத்த வேண்டும் என இக் கூட் டம் கேட்டுக் கொள் கிறது.
தீர்மானம் எண் 5:
திராவிடர் கழக இளை ஞரணி சார்பில் 2020 மே 2 ஆம் நாள் நடைபெற இருந்த மாநில இளைஞரணி மாநாடு கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று பாதிப்பு முடி வுக்கு வந்தவுடன் அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது எனத்தீர்மானிக் கப்படுகிறது.
No comments:
Post a Comment