பள்ளிக் கூடமும்
கல்லூரிக் கல்வியும்
கைநீட்டும் தூரத்தில்...
பட்டப் படிப்பும்
பல்கலைச் சிறப்பும்
பாமரர் பக்கத்தில்
தமிழில் கற்கவும்
தமிழால் நிற்கவும்
தனித்துறை உச்சத்தில்
சமூக நீதியும்
தனியாகச் சட்டமும்
அரசியல் சாசனத்தில்
அரசுப் பணியும்
ஆட்சிக் கனியும்
திராவிடர் மகுடத்தில்
ஆணும் பெண்ணும்
அனைத்துப் பாலினமும்
சமத்துவ வட்டத்தில்
ஜாதிப் பாம்பும்
மதக் கொடுக்கும்
நச்சிழந்து பயத்தில்
சிண்டுகளின் சீண்டலும்
சங்கிகளின் சலசலப்பும்
மண்டியிடும் சீக்கிரத்தில்
இத்தனைச் சாதனையும்
எண்ணற்ற செயலணியும்
ஈரோட்டு எழுச்சியில்
எஞ்சிய பணியும்
விஞ்சிய வெற்றியும்
வீரமணி வியூகத்தில்!
- முனைவர் அதிரடி அன்பழகன்,
மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment