கடலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் கரோனா நிவாரணம் வடக்குத்து, பேக்கேநத்தம் பகுதியில் வழங்கப்பட்டது மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ப.கா ரேவந்த் ஆண்டனி இந்திரா நகர் மணிகண்டன் மற்றும் தோழர்கள் கலந்துக் கொண்டனர்.
திருவல்லிக்கேணி பகுதியில் பாதிக்கப்பட்டோருக்கு துயர்துடைப்புப் பணி
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 25.5.2020 முற்பகல் 11.00 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ்அவுஸ் பகுதியில் கரோனா வைரசு நோய் தாக்கப்பட்டு மருத்துவமனையில் குடும்பத் தலைவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினருக்கு தங்களால் இயன்ற உணவு (அரிசி,பருப்பு போன்ற மளிகை பொருள்கள்) பொருள்களை இரண்டாம் கட்டமாக கொடுத்து உதவினார் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன்.
No comments:
Post a Comment