சட்டாம்பிள்ளைத் தனம் அதிகாரம். ஆனால் இருமாப்பு ஆகியவற்றில் உலகில் முதன்மை நிலை வகிக்கும் அமெரிக்கா. கரோனா நோய் தொற்றிலும் முன்னணியில் உள்ளது. 93 கல் தொலைவில் அமெரிக்காவிற்கு அருகிலுள்ள தீவு நாடான கியூபா சிறிய நாடு. 1959இல் விடுதலைப் பெற்றதும் இது ஒரு நாததிக சோசலிச நாடு. மக்களுக்கு மிருத்துவமும் கல்வியும் இலயமாக அளிப்பது அரசின கடமை என பிடல் காஸ்ட்ரோ பிரகடனப்படுத்தினார். அதன் விளைவால் 100 பேருக்கு ஒரு மருத்துவரும் ஒரு செவிலியரும் மக்களுக்கு வீடு அமைத்து மருத்துவ வசதி அளித்து நோய் நொடியிலிருந்து காத்து வருகின்றனர்.
1981 மார்ச் திங்களில் அமெரிக்காவில் மூளைக் காய்ச்சல் நோயால் குழந்தைகள் உள்ளிட்ட மூன்று லட்சத்து 40 ஆயிரம் மக்கள் பாதித்து உயிர் விட்டனர். அமெரிக்கா, கியூபாவுடன் பகமை நாடாகயிருந்த போதிலும் அவாகள் கேட்டுக் கொள்ளாமலேயே ஆயிரக்கணக்கான மருத்துவர்களை அமெரிக்காவிற்கு கியூபா அனுப்பி மக்களை காத்தனர். மஞ்சள் காமாலை நோயிக்கும் மருந்து கியுபாவில் கண்டறிந்து உலகில் பல நாடுகளுக்கு குறைந்த செலவில் அனுப்பி வைக்கின்றனர்.
1981இல் Interferon alfa 2b என்னும் வைரஸ் தொற்று தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து கரோனா தொற்றால் அதிக அளவில் பாதித்த சீனா, இத்தாலி, லத்தின் அமெரிக்கா போனற் நாடுகளுக்கு குறைந்த விலையிலும் இலவயமாய் மருந்தை அனுப்பி பேருதவி செய்கின்றது கியூபா. பல்வேறு நாடுகளில் கிலி, பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் போனற் பேரிடரில் சிக்கிய நாடுகளுக்கு மருந்து - இரத்தம் மருத்துவர் செவிலியர்களை அனுப்பி மருத்துவ சேவை செய்வதே நாட்டின் லட்சியமாய் கொண்டு சிற¤ய நாடு உதவி வருகிறது.
உலகில் அனைத்து நாடுகளிலும் மார்ச் 2020 தொடங்கி கரோனா அச்சுறுத்தும் இத்தருணத்தில் 1500 பயணிகளைக் கொண்ட இங்கிலாந்தின் பிரேமர் பெரும் கப்பல் கரையேற அனுமதிக்காமல் தவிடிதத வேளையில் இரு கரம் நீட்டிப் பயணிகளை நாடடில் தங்க வைத்து 46 நபர்கள் கரோனா நோயினை கண்டறிந்து மருததுவம் பார்தது விமானக் கட்டணமும் உணவும் வழங்கி லண்டனுக்கு அனுப்பியது மனிதநேய மிக்க கியூபா நாடு.
மருத்துவமும் கல்வியும் வணிகமில்லை என்று அறிவித்து சுகாதாரத்தை கிராமத்திலிருந்து தொடங்கியமையால் கரோனா இல்லாத நாத்திக சோசலிச நாடாய் கியூபா விளங்கி வருகின்றது. வளர்ந்த பொருளாதாரம் நிறைந்த நாடுகளும் வல்லரசு நாடுகளும் இதனை அடியொற்றி மனதநேயத்தோடு ஆளுமை செய்தால் நன்மை மக்களுக்குப் போய் சேரும்.
- அ.இரா.முல்லைக்கோ, பெங்களூரு-43
No comments:
Post a Comment