இஸ்ரேலில் உள்ள பார் இலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குழாய்த் தண்ணீரை ஓர் ஆற்றல்மிக்க கிருமி நாசினியாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது corona உட்பட, அனைத்து வித வைரஸ்களுக்கும் எதிராக செயல்படும் என அவர்கள் கூறியுள்ளனர். இது சுற்றுப்புறத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதல்ல எனவும், நோய் தாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொல்லும் தன்மை கொண்டது எனவும் கூறுகின்றனர். இந்தத் தொழில்நுட்பத்தை வேதியியல் துறையின் மின் வேதியியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர் இரான் ஆவ்ரஹாம், டாக்டர் அய்சாக் கொஹென் மற்றும் பேரா.டிரோன் அர்பக் ஆகியோர் உருவாக்கி, அதைத் தங்களுக்கு உரிமையாக்கி உள்ளனர்.
அவர்கள் உருவாக்கிய இந்த கிருமி நாசினியை, டாக்டர் இன்னா கல்ட் மற்றும் டாக்டர் டாடியான போர்தியான்ஸ்கி ஆகியோர், பேரா. ரோனித் சாரிட் என்பவரின் ஆய்வகத்தில் பரிசோதித்து, அது கொரொனா போன்ற நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்டது என கூறியுள்ளனர். இந்தக் கிருமிநாசினி, உபயோகிப்பதற்கு பாதுகாப்பானது என்றும், நிலத்தடி நீரை மாசுபடுத்தாது என்றும் கூறப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம், நானோ மீட்டர் அளவிலான எலக்ட்ரோடுகளை, அதன் மேல்பரப்பின் தன்மைகளைக் கொண்டு இயங்குகிறது. இந்த எலக்ட்ரோடுகள் தண்ணீருடன் சந்திக்கும்போது, ஒரு தூய்மையான சுத்திகரிக்கும் தன்மையுள்ள பொருள் தண்ணீர் சூழலில் உருவாகிறது. இந்தக் கூறுகள் அனைத்தும் ஒன்று சேரும்போது, அவை ஒரு வலிமையான, நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மையுள்ள பொருளாக, அதே சமயம் பேருயிரிகளின் சருமத்தினைப் பாதிக்காத வகையிலும் உள்ளது.
இதன் மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள், மெத்தைகள், கழிவறைகள் ஆகியவற்றின் மீது நுண்துகள்கள் மூலம் தெளிப்பதற்கும், கிருமிநாசினி துடைப்பான்கள், கைகழுவும் திரவங்கள், குளிர் சாதனங்கள் மற்றும் காற்று சுத்திகரிப்பான்கள் போன்ற பல்வேறு வகையான தூய்மை வெளிகளை பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும் தன்மையுள்ளது. இந்த நானோ தொழில்நுட்பத்தின் வழியாக கண்டறியப்பட்ட எலக்ட்ரோடுகள் பல்வேறு வடிவங்களில் உருமாறிக்கொள்ளக் கூடியவை ஆகும். குளிர் சாதனங்களில் பயன்படுத்தப்படும் காசெட்டுகள், மாமிசம் கழுவப் பயன்படும் பாத்திரம், காய்கறிகள் மற்றும் பழங்கள் மீதுள்ள பூச்சிக்கொல்லிகள் அகற்ற, ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் தன்மையுள்ள மாஸ்க்குகள் மற்றும் கையுறைகள் எனப் பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் கிருமி அகற்றும் தன்மை, சாதாரண ப்ளீச்சை விட 100 மடங்கு அதிக ஆற்றல் வாய்ந்தது. இது, ஒரு லிட்டர் நீரில் 5000 மற்றும் 20000 மில்லிகிராம்கள் ப்ளீச் பயன்படுத்துவதை விட, குறைவான அளவில் வெறும் 50 மற்றும் 200 மில்லிகிராம்கள் பயன்படுத்தினால் போதுமானது. இது சுற்றுப்புறச் சுகாதாரத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல், நமது சருமங்களில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பயனளிக்கிறது. இதன் புண் ஆற்றும் தன்மையும் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இது அரிக்கும் தன்மை இல்லாது, மிகக் குறைந்த மில்லிகிராம் அளவுகளில் அனைத்து வகையான வைரஸ்களையும் கொல்லுகிறது.
மறுசுழற்சி செய்யக்கூடிய பாட்டில்களில் அடைத்து பயன்படுத்தும்போது, இவற்றை 2 மாதங்களுக்கு மிகாமல் சேமிக்க முடிகிறது.
இது ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் tஹ்ஜீமீ 1 மற்றும் நீஷீக்ஷீஷீஸீணீ வைரஸ் ளிசி43 ஆகிய இரண்டையும் முற்றிலுமாக அகற்றி எதிர்த்துள்ளது. ளிசி 43 என்னும் நீஷீக்ஷீஷீஸீணீ ஸ்வீக்ஷீus கிருமி சமீபத்திய ஷிகிஸிஷி-சிஷீக்ஷி-2 ஸ்வீக்ஷீus கிருமியை போல் உருவத்தில் இருப்பதால், இதனை கொண்டு நீஷீக்ஷீஷீஸீணீ கிருமியை அளிக்கலாம் என பேரா. சாரித், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- மருத்துவர் அ.கௌதம்
No comments:
Post a Comment