அரியலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துறவாடல் கூட்டத்தில் இரா.ஜெயக்குமார் உரை
அரியலூர், ஜூன் 28- திராவிடர் கழக அரியலூர் மாவட்ட இளை ஞரணி கலந்துறவாடல் கூட்டம் 9.6.2020 அன்று மாலை 5 மணி முதல் 6.45 மணி வரை காணொலி மூலம் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி தலைவர் சு. அறிவன் வரவேற்புரையாற்றி னார். திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் தலைமை ஏற்று உரையாற்றினார். அப்போது, கரோனா காலக் இடையூறுகளை களைய தமி ழர் தலைவர் வழங்கிய கட் டளைகளை செயல்படுத்த வேண்டும். அரியலூர் மாவட்ட இளைஞரணித் தோழர்கள் விடுதலை நாளிதழை வாட்ஸ் அப் மூலம் நண்பர்கள், உற வினர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும், விடுதலை வளர்ச்சி நிதி திரட்டித்தர வேண்டும் எனவும் கூறினார்.
அரியலூர் மண்டலத் தலைவர் பொறியாளர் கோவிந் தராஜ், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல் வன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். மாவட்டத் தலைவர் விடு தலை நீலமேகன் தொடக்கவு ரையாற்றினார். நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் சிறப்பு ரையாற்றினார். அவர் ஆற் றிய உரை வருமாறு
கரோனா காலத்தில் நாம் முடங்கியிருக்காமல் தமிழகம் முழுவதும் ஒருவரை ஒருவர் காணொலி மூலமாக சந்தித் துப் பேசி வருகிறோம். இத னைத்தான் தந்தை பெரியார் அவர்கள் இனிவரும் உல கத்தின் மூலமாக தெளிவாகக் கூறினார். அதில், இனி வரும் காலங்களில் கம்பி இல்லாத தொலை பேசிகள் வரும். ஒரு வர் முகத்தை ஒருவர் பார்த்து பேசிக்கொள்ளும் சாதனங் கள் வரும் என்றார். இன்று நாடே இதனைப் பின்பற்றி வருகிறது.
இத்தைகைய நிலையில், கரோனாவால் ஊரும், உல கமும் அடங்கியிருக்கக்கூடிய நிலையில், நமது தோழர்க ளுக்கு முடக்கம் இல்லை என்கிற நிலையை நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார். இந்த இக்கட்டான காலகட் டத்திலும், தந்தை பெரியார் தந்த புத்தியைக்கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலை நடத்தி வருகிறார்.
வாட்ஸ்அப் மூலம் பல லட்சம் பேரிடம் விடுதலை சென்றுகொண்டிருக்கிறது. வாட்ஸஅப் மூலம் விடுதலை செல்வதால் பொருளாதார நட்டம் ஏற்படுமே என தோழர்கள் கேட்டதற்கு, லட் சங்களை விட இலட்சியமே நமக்கு முக்கியம் எனத்தெரிவித்து, விடுதலையை தோழர் கள் பாதுகாப்பார்கள் எனத் தெரிவித்தார்.
இதன்படி ஏராளமானோர் இந்த கரோனா துயர்மிகுந்த காலத்திலும் விடுதலையின் வளர்ச்சிக்கு தங்களின் விடுதலை வளர்ச்சி நிதியை அளித்து வருகின்றனர். ஏனென்றால் விடுதலை தான் நமக்கான தகவல் பரிமாற்ற சாதனம்.
விடுதலையின் தேவையை நாம் எப்படி உணரவேண்டு மென்றால், 2 மாதங்களுக்கு முன்பே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண் டும் என அறிக்கை விடுத்தார். இதையே வலியுறுத்தி அனைத் துக்கட்சிகளும் தங்கள் கருத் தைத் தெரிவித்தன. மேலும், போராட்டத்தையும் அறிவித்து. இந்நிலையில், மாண வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முத லாக தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கை விடுத்தவர். நமது தலைவர். இன்று தமிழகத்தின் மிக மூத் தத் தலைவர் நமது தலைவர் தான். தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்க ளின் கருத்துதான் தமிழகத்தின் கருத்தாக உள்ளது என்று தெரிவித்தார்.
கூட்டத்தில், மண்டல இளைஞரணிச் செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி செய லாளர் க.கார்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சங்கர், மாவட்ட இளைஞ ரணி துணைத் தலைவர் தமி ழரசன், இளைஞரணி நிர் வாகிகள் தர்மேந்தர், வீராக் கன் மகேஷ், திராவிட விஷ்ணு, பெரியார் செல்வன், விருத் தாசலம் மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் வெங்க ட.ராசா, சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் கூ.செல்வம், அரியலூர் நகரத் தலைவர் சிவக்கொழுந்து, உரத்தநாடு உத்ராபதி, தஞ்சை ஏ.வி.எம்.குணசேகரன், பிரான்ஸ் ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். நிறைவாக திராவிட விஷ்ணு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment